‛‛அய்யோ'' என்ற தமிழ் வார்த்தை உலகின் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் புதிதாக இடம் பெற்றுள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தால் வெளியிடப்படும் ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரி (Oxford English Dictonary), ஆங்கிலம் கற்கும் அனைவருக்கும் இந்த புத்தகம் பெறும் வரபிரசாதமாக அமைந்துள்ளது. இதற்கு இந்த புத்தகத்தில் ஏராளமான ஆங்கில வார்த்தைகளும், அதற்கான சரியான விளக்கங்களும் இருப்பதால் தான் என கூறப்படுகிறது.
தமிழ் வார்த்தை :
இந்நிலையில் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு மொழி குறித்த பல ஆராய்ச்சிகளை நடத்தி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் வெளியிடும் டிக்ஷ்னரியில் புதிய வார்த்தைகளையும், அதற்கான விளக்கங்களையும் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த செப்., மாதம் வெளியிடப்பட்ட ஆக்ஸ்போர்டு டிக்ஷ்னரியில் ‛‛ அய்யோ'' (AIYOH/AIYAH) என்ற தமிழ் வார்த்தை இடம் பெற்றுள்ளது.
எமனின் மனைவி :
அய்யோ என்பது துக்கம், சோகம், வலி, அதிர்ச்சி உள்ளிட்ட உணர்ச்சிகளை வெளிடுத்தும் ஒலியாக இருந்து வருகிறது. இந்து மத நம்பிக்கைகளின் படி, மரணம் எனும் நிகழ்வை நடத்துகிற தேவனாகி எமனின் மனைவியின் பெயர் ‛‛அய்யோ'' என கூறப்படுகிறது. இதனாலேயே தமிழ் கலாச்சாரத்தில் பெரியவர்கள் ‛‛அய்யோ'' என்ற வார்த்தையை பயன்படுத்த கூடாது என கூறி வந்தனர். அவ்வாறு பயன்படுத்தினால் எமனின் மனைவியாக ‛‛அய்யோ'' எமனையும் அழைந்து கொண்டு வந்து விடுவார் என நம்பிக்கை இருந்து வருகிறது.
ஆச்சர்யம் :
தமிழ் மொழி அல்லாது இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ‛‛அய்யோ'' என்பது போன்ற ஒலி அமைப்பு கொண்ட சொல் சில சில மாற்றங்களை கொண்டு பயன்படுத்தப்படுகிறது. திராவிட மொழிகளில் அதிகம் இந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. உலகில் பல அறிஞர்களால் பயன்படுத்தப்படும் ஆங்கில அகராதியில் தமிழ் சொல்லான ‛‛அய்யோ''வை இணைத்திருப்பது பலரை ஆச்சரிப்பட வைக்கிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment