நேர்முகத்தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து, அரசு பணியில் சேர்ந்தவன் கைது
செய்யப்பட்டான். திருவண்ணாமலை மாவட்டத்தில், அரசு வனத்துறை தொடக்கப் பள்ளி
ஒன்றில், புதிதாக உறைவிட பள்ளி துவங்கப்பட்டுள்ளது. இதில், இரவு காவலர்
பணிக்கு நேர்முகத் தேர்வு நடந்தது. இதில், சிவாஜி, 38, என்பவன் தேர்வு
செய்யப்பட்டான்.
நேற்று முன் தினம் உறைவிட பள்ளி துவக்க விழா நடந்தது. இதில், பங்கேற்ற உயர் அதிகாரி ஒருவர், இரவு காவலராக தேர்வானவரை, பணி நிமித்தமாக அழைத்தார். ஆனால், தேர்வானவருக்கு பதிலாக, வேறு ஒருவன் வந்தான். அவனிடம் நடத்திய விசாரணையில், அவன் சிவாஜி என்பதும், நேர்முகத் தேர்வில் இவனது சான்றிதழை காண்பித்து, அண்ணன் குமார் பங்கேற்றதும் தெரியவந்தது. இது குறித்து, உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, சிவாஜியை கைது செய்தனர். மேலும், ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட, குமாரை தேடி வருகின்றனர்.

إرسال تعليق