Title of the document

தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தில் அரசு, தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு விவரங்கள் வெளியிடப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்தார்.
மத்திய மாநில அரசுத் தேர்வுகள், மத்திய அரசு சார்ந்த நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் வேலைவாய்ப்பு விவரங்கள், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி ஏடுகள், அயல்நாட்டு வேலைவாய்ப்புகள், தொழில்நெறி வழிகாட்டுதல்கள் போன்றவையும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தை நாடி தங்களுக்குத் தேவையான விவரங்களை அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم