இன்று இரவு (வெள்ளி அக்டோபர் 21) உங்களுக்கு ஒரு முக்கிய வேலை இருக்கு. சுமார் 10.25க்கு மொட்டை மாடிக்கு குழந்தைகளுடன் நீங்கள் போக வேண்டும். எந்த திசையில் ஓரியன் நட்சத்திரக்கூட்டம் வானில் எங்கே இருக்கும் என முன்னரே பார்த்துவிட்டு செல்லவும். வானில் இன்று இரவு வானவேடிக்கை நடக்க உள்ளது. ஓரியனாட் விண்கற்கள் பொழிவு அக்டோபர் 21 இரவு நடக்க உள்ளது.
ஒரு கட்டிடம் கட்டியதும் கீழே சிதறி இருக்கும் கற்கள் போல அண்டம் முழுக்க சிதறி இருக்கும் கற்கள் தான் விண்கற்கள். அவற்றுக்கு என தனி பாதை இருக்கும் அப்படி தன் பாதையில் சுற்றும்போது பூமிக்கு அருகே வருகையில் இந்த விண்கற்கள் மழையினை பார்க்கலாம். சில சமயம் அவை பூமிக்குள்ளும் வரலாம். ஓரியனாட் கற்கள் அப்படி வர வாய்ப்பில்லை.
இரவு வானினைக்காட்டி விண்கற்கள், நட்சத்திரக்கூட்டம், நட்சத்திரம் பேசி வானவியல் மீது குழந்தைக்கு ஈர்ப்பு ஏற்படுத்த ஒரு அற்புதமான வாய்ப்பு.
வானில் விண்கற்கள் பொழிவு தெரியும் நேரம் : இரவு 10.30 முதல் விடியற்காலை 5.30 வரையில்.
- விழியன்
Post a Comment