முதல்-அமைச்சர் அலுவலக கோப்புகளில் ஓ.பன்னீர்செல்வம் கையொப்பமிடுவார் என்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 23-ந்தேதியில் இருந்து 12-ந்தேதிவரை தலைமைச் செயலகத்தில் அரசுப் பணிகளில் சற்று தொய்வு நிலை ஏற்பட்டிருந்தது. முதல்- அமைச்சரின் உடல் நலனை விசாரிப்பதற்காக அமைச்சர் கள், மூத்த அதிகாரிகள் பலர் ஆஸ்பத்திரியில் தங்கியிருந்ததால் இந்த நிலை நீடித்தது.
சகஜ நிலை திரும்பியது
ஆனால், முதல்-அமைச்சரின் துறைகள் அனைத்தும் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக் கப்பட்டதாக கவர்னர் அறிவித்ததைத் தொடர்ந்து, தலைமைச் செயலகம் சகஜ நிலைக்கு திரும்பியுள்ளது.
அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ் ணன் மற்றும் அரசுத்துறைச் செயலாளர்கள் தலைமைச் செயலகத்துக்கு நேற்று வந்திருந்தனர். அரசுப் பணிகளும் துரிதமாக நடைபெற்றன.
அரசாணை
பொதுவாக, முக்கிய கோப்புகளில் அரசு அதிகாரிகள் கையொப்பமிட்ட பிறகு இறுதியில் முதல்-அமைச்சர் கையெழுத்திடுவார். தற்போதுள்ள சூழ்நிலைப்படி, முதல்- அமைச்சர் அலுவலக கோப்புகளில் நிதித்துறை அமைச்சர் கையொப்பமிடுவார் என்று தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
அவசர சட்டம்
24-ந்தேதியோடு உள்ளாட்சி அமைப்புகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவி காலம் முடிகிறது. இந்த பதவிகளுக் கான தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ததோடு, தனி அலுவலர்களை நியமிக்கும்படி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே இதற்கான அவசர சட்டத்தை கவர்னர் பிறப்பிக்க அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஆனால் கடந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்னும் முடித்து வைக்கப்படவில்லை. சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைக்கப்படாமல் அவசர சட்டத்தை கவர்னர் பிறப்பிக்க முடியாது.
விரைவில் வரும்
சட்டசபையை முடித்து வைப்பதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பிக்க வேண்டும் என்பதால் அதற்கான கோப்பு அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அதிகாரிகள் நியமனம் தொடர்பான அவசர சட்டத்தை கவர்னர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான முதல்- அமைச்சர் அலுவலக கோப்பில் நிதித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு அனுப்புவார்.

إرسال تعليق