Title of the document


கல்விதகவல் மேலாண்மை இணையதளத்தில், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் தகவல்களை,இம்மாத இறுதிக்குள், பதிவு செய்ய வேண்டுமென்ற, உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது.அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்கும் நோக்கில், கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் (எமிஸ்), மாணவர்களின் தகவல்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதில், நடப்பாண்டில் புதிதாக சேர்ந்த, ஒன்றாம் வகுப்பு மாணவர்களின், தகவல்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.அனைவருக்கும்கல்வி இயக்கக, மாநில திட்ட இயக்குனர் பூஜா குல்கர்ணிவெளியிட்ட அறிக்கையில், எமிஸ் இணையத்தளத்தில், இரண்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களின் தகவல்கள், ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாணவர்கள்,வேறு பள்ளிக்கு மாறியிருந்தால், தகவல்களை புதுப்பிப்பது அவசியம். மேலும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் பெயர், பாலினம், பெற்றோர் பெயர், பிறந்ததேதி, ஆதார் எண் உள்ளிட்ட அடிப்படை தகவல்களைபதிவு செய்து, இம்மாதம் 30ம் தேதிக்குள், சமர்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post