அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் நலம் விசாரித்தனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி முதல் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து மருத்துவமனை நிர்வாகம் அவ்வப்போது தெரிவித்து வருகிறது. அதைத்தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்களும்யி அப்போலோ மருத்துவமனைக்கு சென்று முதலமைச்சரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.
அந்தவகையில் அப்போலோ மருத்துவமனைக்கு இன்று மாலை 6.30 மணிக்கு நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது மகள் ஐஸ்வர்யா ஆகியோர் வந்தனர். சுமார் 15 நிமிடங்கள் மருத்துவமனையில் இருந்த அவர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் அமைச்சர்களிடம் கேட்டறிந்தனர்.
إرسال تعليق