Title of the document


கிருஷ்ணகிரி மாவட்டம் சுகாதாரத்துறை இணை இயக்குநர் பொறுப்பை கவனிக்கும் கண்காணிப்பாளர் அசோக்குமார், சுகாதாரத்துறை அமைச்சரை மீறி 13 ஊழியர்களை தற்காலிக பணி நியமனம் செய்ததில் ஊழல் நடந்துள்ளதாக சர்ச்சைகள்

உருவாகியுள்ளது. இதனால் அமைச்சர் விஜய் பாஸ்கருக்கும், இணை இயக்குநருக்கும் மோதல் நடந்து வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட மருத்துவத்துறையில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுகுறித்து, இணை இயக்குநர் பொறுப்பைக் கவனிக்கும் அசோக்குமாரை தொடர்புகொண்டு குற்றச்சாட்டுகளைப் பற்றி கேட்டோம்.

“சார்… நீங்கள் சொல்வதுபோல் 13 ஊழியர்கள் அல்ல, ஏழு ஊழியர்களைதான் தற்காலிகமாக எடுத்துள்ளோம். மத்திய அரசு நிதியில் செயல்படக்கூடிய டி.இ.ஐ.சி. திட்டத்துக்கு ஆள் இல்லாமல் மேல் அதிகாரிகள் கேள்வி கேட்டார்கள். அதனால்தான் அவசரமாக ஏழு ஊழியர்களை தற்காலிக பணியில் நியமித்துள்ளோம். திருவள்ளுர் மாவட்டத்திலிருந்து அமைச்சர் சொன்னார் என்று பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் அனுப்புவதாக கேட்டார்கள். அது சரியாக இருக்காது என்று சொந்த மாவட்டத்தில் ஊழியர்களை நியமனம் செய்தேன். மக்கள் நலன் கருதிதான் இதைச் செய்தேன். பிரச்னையைப் புரிந்து கொள்ளுங்கள்” என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post