
கள்ளநோட்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை செய்துள்ளது.
இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொது இடங்கள் மற்றும் கடைகளில் அதிக முகமதிப்பு உடைய போலி கரன்சி நோட்டுகளை, விஷமிகள் சிலர் புழக்கத்தில் விட துவங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோட்டுகளை வாங்கும் போது, பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும் ரிசர்வ் வங்கி வெளியிடும் ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக இருக்கும், எனினும், கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க ரூபாய் நோட்டுகளில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க, தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் அந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கள்ள நோட்டுகளை, வைத்திருந்தாலோ, புழக்கத்தில் விட்டாலோ கடும் தண்டனை விதிக்கப்படும் என்றும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.