பள்ளி மாணவ, மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, இன்ஸ்பயர் விருதுகள் வழங்கப்படுகிறது.
இதில், பங்கேற்கும் மாணவர்களுக்கு தலா, 5,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இத்தொகை மூலம், அறிவியல் கண்டுபிடிப்புகளை கல்வி மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்த வேண்டும்.
இதில, தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதில், முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, அக்டோபர், 15, 16ம் தேதிகளில், திருச்செங்கோடு எலயம்பாளையத்திலுள்ள விவேகானந்தா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அக்டோபர், 17, 19 தேதிகளில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது
إرسال تعليق