Title of the document


மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 441 கான்ஸ்டபிள்/ டிரைவர் பணியிடங்களுக்கு 10ம் வகுப்புடன் டிரைவிங் லைசென்ஸ் பெற்ற எஸ்சி, எஸ்டி பிரிவினர் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

பணி:
Constable/ Driver:


441 இடங்கள் (எஸ்சி - 364, எஸ்டி - 77). இவற்றில் 44 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சம்பளம்:


ரூ.5,200 - 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000. வயது வரம்பு:


19.11.2016 அன்று 21 முதல் 27க்குள். எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகள் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். கல்வித்தகுதி:


10ம் வகுப்பு தேர்ச்சியடன் கனரக மற்றும் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி:


எஸ்சி பிரிவினருக்கு - உயரம்: 167 செ.மீ., மார்பளவு - 80 செ.மீ., விரிவடைந்த நிலையில் 85 செ.மீ., எஸ்டியினருக்கு உயரம் - 160 செ.மீ., மார்பளவு - 76 செ.மீ., விரிவடைந்த நிலையில் 81 செ.மீ., உயரத்திற்கேற்ற எடை இருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பத்தை http://www.cisf.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும். விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
DIG,
CISF (South Zone),
Rajaji Bhavan, 'D' Block,
Beasant Nagar,
CHENNAI-90.
Tamilnadu. PIN: 600090.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்:
19.11.2016.
Dailyhunt

related st

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post