Title of the document


மும்பை: இந்தியாவில் செயல்படும் 4ஜி சேவைகளில் ஜியோ 4ஜி தான் மிகவும் மோசமாக செயல்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

செல்போன் சேவையில் ஒரு புரட்சி என்று கூறி இந்த ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்தால் துவங்கப்பட்டது ஜியோ 4ஜி சேவை. பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா கணவை நிறைவேற்ற இந்த சேவையை நாட்டு மக்களுக்கு அற்பனிக்கின்றோம் என்ற முழக்கத்துடன் ஜியோ 4ஜி சேவையை துவக்கி வைத்தார் முகேஷ் அம்பானி.

ஆரம்பத்தில் மூன்று மாதம் இலவசமாக 4ஜி வேகத்தில் இண்டெர்நெட், இலவச வாய்ஸ் மற்றும் வீடியோ கால்கள், இலவச குறுஞ்செய்திகள் என்று அனைத்தும், முழுக்க முழுக்க இலவசம் என்றே தொடங்கியது ரிலையன்ச் ஜியோ 4ஜி சேவை.

நம் மக்களுக்கு இலவசம் என்று சொல்லிவிட்டால் கேட்கவா வேண்டும், உடனே இதுவரை இருந்த நிறுவனங்களை எல்லாம் திட்டி தீர்த்துவிட்டு, தங்களை காக்க வந்த கடவுளாக ஜியோ 4ஜி சேவையை நம்பி, வரிசையில் காத்து கிடந்து ஜியோ 4ஜி சிம் வாங்கி நிம்மதி அடைந்தனர்.

ஆரம்பத்தில் ஜெட் வேகத்தில் இயங்கிய ஜியோ 4ஜி சேவை, நாள் ஆக, ஆக ஆமை வேகத்திற்கு சென்றுவிட்டது. டிராய் அமைப்பு வெளியிட்டுள்ள இணைய வேக சோதனை செயலி மூலம், நாம் பயன்படுத்தும் நெட்வொர்க்கின் வேகத்தை அறிந்துகொள்ள முடியும்.

இந்த சோதனையில், இந்தியாவில் செயல்படும் 4ஜி சேவையில் மிகவும் மந்தமாகவும், கடைசி இடத்தையும் பிடித்திருக்கிறது ஜியோ 4ஜி வேகம்.

இந்தியாவில் செயல்படும் 4ஜி சேவையின் பதிவிறக்க வேக விவரம்:

ஏர்டெல் - 11.9

ரிலையன்ஸ் - 7.9

ஐடியா - 7.6

வோடஃபோன் - 7.3

ஜியோ 4ஜி - 6.2.

இந்த கணக்கீடு மும்பை பகுதியில் செயல்படும் வேகத்தை கொண்டு கணக்கிடப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பகுதிகளில் ஜியோ 4ஜி வேகம், மற்ற நிறுவனங்களின் 2ஜி வேகத்தை விட மோசமாகவே உள்ளதாக வாடிக்கையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post