Title of the document


_*தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22-ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவம்பர் 19-ல் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26-ம் தேதி துவங்குகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2-ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற நவம்பர் 5-ம் தேதி கடைசி நாளாகும்.*_

_*முன்னதாக கடந்த மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த கடும் புகாரையடுத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்தது. மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு தேர்தல் முடிவுகள் வெளியான பின் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 19-ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்ததால் அங்கும் இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 19-ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.*_
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

أحدث أقدم