ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே தேர்போகியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் கிராம இளைஞர்களின் முயற்சியால் மாணவர் சேர்க்கை ஒரே ஆண்டில் 2 மடங்காக அதிகரித்துள்ளது.
கிராமப்புற அரசுப் பள்ளிகள் என்றாலே அடிப்படை வசதிகள், சுகாதார வசதிகள் ஏதுமின்றி, வெயி லுக்கும் மழைக்கும் ஒதுங்க முடி யாத கட்டிடங்களில் வகுப்பறைகள் நடைபெறும் என்பதே பெற்றோரின் பொதுவான கருத்தாக உள்ளது. இதனால், கிராமங்களில் வசிக்கும் பலர், தொலைதூரத்தில் இருக்கும் தனியார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புகின்றனர். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.
மண்டபம் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட தேர்போகி கிராமமும் இதற்கு விதிவிலக்கல்ல. இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரும் நிலை யில், இப்பகுதியைச் சேர்ந்த பெற் றோர்கள் தங்கள் குழந்தைகளை மண்டபம், பனைக்குளம், உச்சிப் புளி, ராமநாதபுரத்தில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அனுப்பி வந்தனர். இதனால் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை படிப் படியாக குறைந்து, ஒரு கட்டத்தில் மூடப்படும் சூழல் நிலவியது.
இந்நிலையில் தலைமை ஆசிரியர் சகாய எர்சலின் ராணி, தனது சக ஆசிரியர்களான மேகலா, சுரேஷ் கண்ணன், குருநானேஸ்வரி, கணேஷ்குமார், ஜெயலட்சுமி ஆகி யோருடன் தேர்போகி கிராம இளைஞர்கள் நடத்தும் திருக்குறள் மன்றத்துடன் இணைந்து பெற் றோர்களிடம் அரசு பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து வீடுவீடாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.
பெற்றோர்களின் கோரிக்கை
பின்னர், கிராம கூட்டத்தைக் கூட்டி பெற்றோர்களின் கருத்து களைக் கேட்டறிந்தனர் இதில் கலந்து கொண்ட பெற்றோர்கள், ‘தங்களின் குழந்தைகளுக்கு தனி யார் பள்ளிக்கு நிகராக கல்வி கற்பிக்க வேண்டும். அனைத்து வகுப்புகளிலும் தனித்தனி ஆசிரி யர்கள் வேண்டும், எல்.கே.ஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை நடத்த வேண் டும்’ என கோரிக்கை விடுத்தனர்.
இக்கோரிக்கைகள் நிறைவேற் றப்படும் என ஆசிரியர்களும், திருக்குறள் மன்றத்தினரும் உறுதி அளித்ததைத் தொடர்ந்து, இப்பள்ளி யில் மாணவர் சேர்க்கை உயர்ந் துள்ளது. கடந்த ஆண்டு 48 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருந்த நிலையில், தற்போது 94 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து தலைமையாசிரியர் சகாய எர்சலின் ராணி கூறியதாவது:
பள்ளியின் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்தியுள் ளோம். இதற்காக இந்த ஆண்டுக் கான மத்திய அரசின் புரஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளோம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு ஆசிரி யர் வேண்டும் என பெற்றோர்கள் கேட்டதால், பள்ளியில் பணிபுரி யும் ஆசிரியர்களின் ஊதியத் தில் இருந்து ஒரு ஆசிரியரை நியமித்துள்ளோம். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வழங் கப்பட்ட கணினிகள் மூலம் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கிறோம். மாவட்ட அளவிலான விளையாட் டுப் போட்டிகளில் பங்கேற்க மாண வர்களை தயார்படுத்தி வருகிறோம் என்றார்.
அரும்பும், மலரும்
தேர்போகி திருக்குறள் மன்றத் தலைவர் இன்பராஜ் கூறியதாவது:
மாணவர்களுக்கு பெயர், முகவரி, பெற்றோரின் தொடர்பு எண் அச்சிடப்பட்ட அடையாள அட்டை, சீருடையுடன் டை ஆகிய வற்றை வழங்கியுள்ளோம். பெற்றோர்களின் கோரிக்கையான எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளை அரசு பள்ளியில் தொடங்க முடியாது. எனவே, திருக்குறள் மன்றம் சார்பில் அரும்பும், மலரும் என்ற பெயரில் கிராம சபை கட்டித்தில் 2 ஆசிரியர்கள், ஒரு உதவியாளருடன் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளைத் தொடங்கி யுள்ளோம். இங்கு 29 மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் யூ.கே.ஜி. முடித்ததும், தேர்போகி அரசுப் பள்ளியில் முதல் வகுப்பில் சேர்க்கப்படுவார்கள்.
கிராம மக்களின் ஒத்துழைப் போடு விரைவில் இணைய வசதி, எல்.சி.டி. புரொஜெக்டர்கள் போன்ற வசதிகளுடன் ஸ்மார்ட் பள்ளியாக மாற்ற முயன்று வருகிறோம் எனக் கூறினார்.