Title of the document
மத்திய அரசு நடத்துகின்ற ஆசிரியர் தகுதி தேர்வு ஜூலை மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளது. கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர் நியமனங்களுக்கு தகுதி தேர்வான ‘ஸிடெட்’ (சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிளிட்டி டெஸ்ட்) ஜூலை 7ம் தேதி நடத்தப்பட உள்ளது.

நேஷனல் கவுன்சில் பார் டீச்சர் எஜூகேஷன் (என்சிடிஇ) ஆசிரியர் தகுதி தொடர்பான வழிகாட்டி நெறிமுறைகளை வழங்குகிறது. தேர்வு முடிவு வெளியான நாளில் இருந்து ஏழு ஆண்டுகள் வரை ‘ஸிடெட்’ கல்வி தகுதி ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இருக்கும். தேர்வு எத்தனை முறை வேண்டுமெனிலும் எழுதலாம். 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்களுக்கு தகுதி பெற்றதற்கான சான்று கிடைக்கும். ஸ்கோர் அதிகரிக்க மீண்டும் தேர்வு எழுதுவதில் தடை இல்லை. தேர்வு எழுதுவதற்கான தகுதிகளாக 1 முதல் 5ம் வகுப்பு வரை 45 சதவீத மதிப்பெண் உடன் பிளஸ் 2, இரண்டு வருட டிப்ளமோ இன் எலிமென்ட்ரி எஜூகேஷன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இறுதி தேர்வு எழுதுகின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். 6 முதல் 8ம் வகுப்பு வரை 45 சதவீத மதிப்பெண் உடன் பட்டமும், பி.எட், பி.ஏ., பிஎட், பி.எஸ்சி., பிஎட்., தேர்ச்சி பெற்றவர்களும் தகுதியுடையவர்கள். இறுதி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களும் தகுதியுடையவர்கள். பட்டியல் இனத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மதிப்பெண்ணில் 5 சதவீதம் சலுகை உண்டு.

‘ஸிடெட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க மார்ச் 5ம் தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மார்ச் 8ம் தேதி வரை அவகாசம் உள்ளது. இரண்டரை மணி நேரம் நடைபெறுகின்ற தேர்வில் 2 தாள்கள் உண்டு. நெகட்டிவ் மார்க் முறை இல்லாத மல்டிபிள் சாய்ஸ் அப்ஜெக்டிவ் கேள்விகள் இடம்பெறும். 1 முதல் 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு முதல் தாளும், 6 முதல் 8ம் வகுப்புக்கு இரண்டாம் தாளும் எழுத வேண்டும். வேண்டுமெனில் இரண்டு தாள்களும் எழுதலாம். ஒரு தாளுக்கு விண்ணப்ப கட்டணம் 700 ஆகும். இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 1200. பட்டியல் இனத்தவர், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தாளுக்கு 350. இரண்டு தாள்களும் சேர்த்து 600 செலுத்தினால் போதும். ஜிஎஸ்டி தனி ஆகும். தமிழகத்தில் கோவை, சென்னை, கேரளாவில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு மற்றும் கவரத்தி, பெங்களூரு, மும்பை, டெல்லி உட்பட 97 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகள் ஆகஸ்டில் வெளியிடப்படும். மேலும் விபரங்களை www.ctet.nic.in என்ற இணையதளம் வாயிலாகவும் தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post