Title of the document
பிளஸ் 2 மாணவர்களுக்கு நடப்பாண்டுக்கான அறிவியல் செய்முறை தேர்வுகள் திங்கள்கிழமை தொடங்கின.

பிளஸ் 2 மாணவர்களுக்கான அரசு பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் 1-ஆம் தேதி தொடங்கி 19 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்வுக்கு முன்னதாக அறிவியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு திங்கள்கிழமை  தொடங்கி  பிப்.12 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருத்தணி கல்வி மாவட்டத்தில் மொத்தம் 22 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.

இப்பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, வேதியியல் மற்றும் தாவரவியல் ஆகிய பாடங்களுக்கான செய்முறை தேர்வு திங்கள்கிழமை நடந்தது. திருத்தணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த செய்முறை தேர்வில் 80 மாணவியர் பங்கேற்று செய்முறை தேர்வு எழுதினர். இதை பள்ளி தலைமை ஆசிரியை டி.தெமினா கிரேனாப், அருங்குலம் பள்ளி வேதியியல் ஆசிரியர் பரணிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதே போல் திருத்தணி கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும், இதேபோல் சுழற்சி முறையில் செய்முறை தேர்வு நடந்து வருகிது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post