Title of the document

எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில், தமிழக அரசு பள்ளிகளில் மூன்றாம் பருவ பாடத்திட்டத்துக்கான, குறும்படம் தயாரித்து, இணையதளத்தில் பதிவேற்றும் பணிகள், கோவையில் மும்முரமாக நடக்கின்றன.


மாநில கல்வித்திட்டத்தின் கீழ் உள்ள, ஒன்று, ஆறு, ஒன்பது, பிளஸ் 1 வகுப்புகளுக்கு, சிலபஸ் மாற்றப்பட்டுள்ளது.முப்பருவ கல்விமுறையை பின்பற்றும், ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வரும் ஜன., மாதம், மூன்றாம் பருவ பாடத்திட்டம் துவங்கும்.யூ டியூபில் பதிவேற்றம்இதற்கு புத்தகங்கள் தயாரிக்கும் பணி நிறைவடைந்தது.
இக்கருத்துகளுக்கு அனிமேஷன் உருவாக்கம், வீடியோ தரவுகள் உருவாக்கி, பள்ளிக்கல்வித்துறைக்கான யூ-டியூப் சேனலில் பதிவேற்றுவதற்கான பணி, தற்போது நடக்கிறது.இதில், ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு, சாலை பாதுகாப்பு விதிகள் குறித்த பாடம்இடம் பெற்றுள்ளது.டிராபிக் பார்க்கில் படப்பிடிப்புகோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள, குழந்தைகள் டிராபிக் பார்க்கில், இப்பாடத்துக்கான வீடியோ உருவாக்கும் பணிகள்நடக்கின்றன. பொம்மனம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியை சேர்ந்த, 20 மாணவர்கள், இக்குறும்படத்தில் நடித்துள்ளனர்.

கோவையை சேர்ந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன், வீடியோ காட்சிகள் தயாரிக்கப்படுகின்றன.'மாணவர்கள் வரவேற்பு'பாடத்திட்ட குழு 'இ-கன்டென்ட்' ஒருங்கிணைப்பாளர் மேக்தலின் கூறுகையில்,''இ-கன்டென்ட் பிரிவு மூலம், tnscert யூ டியூப் சேனலில் வெளியிடும் பாடக்கருத்துகளுக்கு, மாணவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு உள்ளது. பாடக்கருத்துகளுக்கு ஏற்ப, பாடல், வீடியோ, அனிமேஷன் மூலம், தரவுகள் உருவாக்கி வருகிறோம். கோவையில் மட்டும் தான் டிராபிக் பார்க் இருப்பதால், சாலை விதிமுறைகள் குறித்த பாடம், இங்கு படமாக்கப்பட்டு வருகிறது,'' என்றார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post