Title of the document
'திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடத்தப்படும்,' என தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் சங்கர் தெரிவித்தார்.

அவர் சிவகங்கையில் கூறியதாவது: புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி செயலர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், பகுதிநேர ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் 2017 ஜூலை 18 முதல் தொடர்ந்து போராட்டம் நடக்கிறது.
அரசு செவிசாய்க்காததால் அக்., 4 ல் தற்செயல் விடுப்பு போரட்டம், அக்., 13 ல் சேலத்தில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு, நவ., 27 முதல் தொடர் வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 'அக்., 4 ல் விடுப்பு அனுமதிக்க கூடாது. விடுப்பு எடுப்போர் மீது ஒழுங்கு நடவடிக்கையுடன் ஊதியம் பிடிக்கப்படும்,' என தலைமைச் செயலர் அறிவித்தார். இது அரசு ஊழியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் மிரட்டலுக்கு பயந்து போராட்டத்தை கைவிட மாட்டோம். திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடக்கும், என்றார்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post