Title of the document

எந்த ஒரு அரசுப் பள்ளியையும் மூடும் நோக்கம் இல்லை. அரசுப் பள்ளிகள் விரைவில் கணினி மயமாக்கப்படும்" என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஆனால், கோவையில் உள்ள ஓர் அரசுப் பள்ளியில், போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவர்கள் மைதானத்தில் வெயிலில் அமர்ந்து படிக்கும் அவலம் நடக்கிறது.
கோவை மாநகரின் சுந்தராபுரம், மதுக்கரை சாலையில் உள்ளது, கே.வி.கே நகர் அரசுத் தொடக்கப்பள்ளி. 2002-ம் ஆண்டு தொடக்கப்பள்ளியாக ஆரம்பித்த, இப்பள்ளி, 2007-ம் ஆண்டில் நடுநிலைப்பள்ளியாகவும், 2011-ம் ஆண்டில் உயர்நிலைப்பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டது மகிழ்ச்சியான விஷயம் என்றாலும் சிக்கல் வேறு வடிவத்தில் வந்தது.
``உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தியதால், கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்தன. அப்போது, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வகுப்பறைகள் தேவைப்பட்டதால், தொடக்கப்பள்ளியில் இருந்து 4 வகுப்பறைகள் நடுநிலைப்பள்ளிக்கு வழங்கப்பட்டன. ஆனால், கட்டுமானப் பணிகள் முடிவடைந்தும், அந்த வகுப்பறைகளைத் தொடக்கப்பள்ளிக்குத் திருப்பிக்கொடுக்கவில்லை. தொடக்கப்பள்ளியின் 257 மாணவர்களுக்கு 4 வகுப்பறைகள்தான் உள்ளன. அவற்றில் ஒன்று தலைமை ஆசிரியர் அறை. இதனால், கடந்த ஓராண்டாக மரத்தடியிலும், கழிவறைக்கு அருகேயும் அமர்ந்து பாடம் படித்து, தேர்வெழுதும் சூழ்நிலைக்கு எங்களின் குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்" என்று ஆதங்கப்படுகின்றனர் மாணவர்களின் பெற்றோர்கள்.
கழிவறை அருகே அமர்ந்து பாடம்
``1 முதல் 5 வகுப்புகள் ஒவ்வொன்றிலும் தமிழ் மற்றும் ஆங்கில மீடியம் பிரிவுகள் இருக்கின்றன. ஆனால், இவற்றுக்குப் பாடங்கள் நடத்த 4 வகுப்பறைகள்தான் இருக்கின்றன. தமிழ் மீடியத்துக்கு பாடம் எடுக்கும்போது, இங்கிலீஷ் மீடியமும், இங்கிலீஷ் மீடியத்துக்குப் பாடம் எடுக்கும்போது தமிழ் மீடிய மாணவர்களும் வெளியில்தான் உட்கார வைக்கப்படுகின்றனர். சமயத்தில், ஒரே வகுப்பறையில் போர்டில் இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, பாடம் எடுக்கும் கொடுமையும் நடக்கிறது. இதனால், மாணவர்களுக்குப் பாடத்தில் கவனம் சிதறவே அதிக வாய்ப்பிருக்கிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post