Title of the document


எம்.எட்., படிப்பில் மாணவர் சேர்க்கைக்கு, 28ம் தேதி கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு உள்ளது


தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் மட்டுமே, பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புக்கு, மாணவர்களை சேர்க்க, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை அனுமதி அளித்துள்ளது


 இதன்படி, பி.எட்., மாணவர் சேர்க்கை, ஏற்கனவே முடிந்த நிலையில், எம்.எட்., மாணவர் சேர்க்கைக்கு, வரும், 28ம் தேதி கடைசி நாள் என, கல்வியியல் பல்கலை அறிவித்துள்ளது


 இதுதொடர்பாக, கல்லுாரிகளுக்கு, பல்கலை பதிவாளர், ரவீந்திரநாத் தாகூர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை


 கல்லுாரிகளில், எம்.எட்., பாடம் நடத்த, குறைந்தபட்சம், 10 ஆசிரியர்களையாவது நியமித்து, அதற்கு பல்கலை அனுமதி பெற வேண்டும். அதன் பிறகே, மாணவர்களை சேர்க்க வேண்டும்


 கல்லுாரிகளின் அங்கீகார ஆவணங்களுடன், மாணவர்களின் கல்வி தகுதி ஆவணங்களை, பல்கலையில் சமர்ப்பித்து, மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெற வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டுஉள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post