Title of the document


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்.

உரை:

எல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற்கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர்.

பழமொழி :

All roads lead to Rome

எல்லா மதங்களும் அன்பை போதிக்கின்றன

பொன்மொழி:

கஷ்டங்கள், நஷ்டங்கள் அடைந்த பின் மனிதர் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகின்றனர்.

-பிராங்க்ளின்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஜப்பானியர் வணங்கும் பறவை?கொக்கு

2.இசை சம்பந்தப்பட்ட காரின் பெயர்?ஆல்ட்டோ




நீதிக்கதை :


கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

(The Bear and the Two Travelers - Aesop Moral Story for Kids)


ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

 ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், ''நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா. என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்'' என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது. ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான். இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

 கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். ''கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்'' என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், ''கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?'' என்ன என்று கேட்டான்.

அதற்குப் சோமு, ''ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது'' என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.

இன்றைய செய்தி துளிகள் :

1.ரயிலில் இலவச இன்சூரன்ஸ் ரத்து: ரயில்வே நிர்வாகம் முடிவு

2.அரசுப் பள்ளிகளில் ரூ.48 கோடியில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி: அரசாணை வெளியீடு!

 3.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தாகில் ரமணி

4.புதுமையான தொழில்களைத் தொடங்குவதற்கான மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது: பிரதமர் மோடி உரை

5.ஆசிய விளையாட்டு போட்டி அணிவகுப்பு தேசியக் கொடி ஏந்தி தலைமை வகிக்கிறார் சோப்ரா: இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவிப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post