வாட்ஸ்அப்-ல் இதுபோல் வந்தால் திறக்க வேண்டாம்! பொதுமக்களுக்கு வாட்ஸ்அப் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களின் மூலம் உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கும் முயற்சியாக, வாட்ஸ்அப் நிறுவனம் புதிய முயற்சி ஒன்றை செய்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் மக்களால் அதிகமாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் மற்றும் குறுஞ்செய்தி செயலியான வாட்ஸ்அப் ஆகியவற்றின் மூலம் சமீபகாலமாக பல்வேறு வதந்திகள் பரவி வருகின்றன.

குறிப்பாக, பெண்கள் கற்பழிப்பு, குழந்தைகள் கடத்தல் கும்பல் தொடர்பாக பகிரப்படும் தவறான தகவல் மற்றும் வதந்தியால் நாட்டின் பல பகுதிகளில் வன்முறையும் உயிரிழப்பும் ஏற்படுகிறது .

இவ்வாறு தவறான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் அப் நிறுவனத்தை மத்திய அரசு எச்சரித்தது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு சுற்றரிக்கை மூலம் ''சமூகவலைத்தளங்கள் மூலமாக உருவாகும் வதந்திகளால் ஏற்படும் தாக்குதல்களை தடுக்கு அளவிற்கு, மாநில அரசுகள் முன்கூட்டியே அதனை அறிந்து தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்''. என அதிரடியாக ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இந்நிலையில், போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதை தடுக்க, வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை முயற்சி நடைபெற்றுவருகிறது.

இந்த புதிய அம்சத்தில், போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும் விதமாக ''வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து எச்சரிக்கை செய்யும் வகையில், குறுந்தகவல்களில் இருக்கும் வலைத்தள முகவரி கொண்டு, அது உண்மையா? இல்லை போலியானதா என்பதை தானே கண்டறிந்து, அந்த செய்து பொய் எனில் ''Suspicious Link'' {சஸ்பீஷியஸ் லின்க்} என சிவப்பு நிறத்தில் எச்சரிக்கை செய்யும்.

இந்த வசதி தற்போது, ''வாட்ஸ்அப் பீட்டா 2.18.204'' வெர்ஷனில் மட்டும் உள்ளது. விரைவில் அனைவருக்கும் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இனி இந்த புதிய அம்சத்தில் பொய்யான செய்திகளை காண்பித்து குடுக்கும், ''Suspicious Link'' {சஸ்பீஷியஸ் லின்க் -சிவப்பு நிறத்தில்} கொடுக்கும் எச்சரிக்கையை பயன்படுத்தி. போலி செய்திகளை தவிக்கலாம்.

0 Comments:

Post a Comment