Title of the document
அடடே... ஆங்கிலம் இவ்வளவு ஈஸியா..!
மொழி

DEGREES OF COMPARISON  PART ONE “சார், டீ குடிக்கலாமா?’’ என்று கேட்டபடியே ரகுவின் அருகே வந்த ரவியிடம், ‘‘குடிக்கலாம், அதற்கு முன் ‘Today is hotter than yesterday’ இதற்கு பாசிட்டிவ் டிக்ரி (Positive degree) என்ன ரவி?” எனக் கேட்டார் ரகு.
‘‘இதுல என்னங்க சார் சந்தேகம். Hotter than என்பது comparative degree. அதோட positive degree ‘as hot as’. அதனால Today is as hot as yesterday. என்பதுதான் அதன் positive degree” என்றான் ரவி. “நோ ரவி! I strongly disagree” என்றவரை விசித்திரமாக பார்த்த ரவி ‘‘எப்படிங்க சார் சொல்றீங்க?” என்றான்.
“அதாவது, ‘Today is hotter than yesterday’ என்றால் ‘நேற்றை விட இன்று மிகவும் வெயிலாய் இருக்கிறது’ என்பது அர்த்தம். அதற்கு comparative degree, ‘நேற்றைய தினம் இன்றைய தினத்தைப் போல் அதிக வெயிலாக இல்லை‘(Yesterday was not as hot as today) என்றுதான் சொல்லமுடியும். ஆனால், நீ சொன்னது Today is as hot as yesterday. அதாவது ‘இன்றைய தினம் நேற்றைப்போல வெயிலாய் இருந்தது’ என்கிறாய். அர்த்தம் தலைகீழாக மாறுகிறது அல்லவா?’’ என்ற ரகுவை சற்றே மீண்டும் குழப்பத்துடன் பார்த்தான் ரவி.

“என்ன ரவி? புரியலயா? உன்னை மாதிரி நிறைய பேர் வெறும் வார்த்தைகளை மாற்றினால் டிக்ரியும் மாறிவிடும் என நம்புகின்றனர். அப்படி அல்ல...! பொருள் மாறுபடக்கூடாது” என்றார் ரகு.“சரி! வேறு முறையில் சொல்கிறேன் கேள்.

 ‘Latha is taller than Indira’  லதா இந்திராவை விட உயரமாக இருக்கிறாள். இது ஒரு comparative sentence. இதனுடைய  positive sentence  ‘Indira is not as tall as Latha’ அதாவது, ‘இந்திரா லதாவைப் போல் அவ்வளவு உயரமில்லை’ என்றுதான் சொல்ல முடியுமே தவிர ‘Latha is as tall as Indira’  என்றால் ‘லதா இந்திரா அளவுக்கு உயரமாக இருக்கிறாள்’ என்றுதான் அர்த்தம்.

ஆனால், உண்மை அதுவல்லவே! உண்மையில் ‘லதாதான் உயரம்’ இப்படிப்பட்ட பொருள்படும் தொனியில் தான் interchanging of degrees of comparison should be done. You should not just replace the words of comparison from positive to comparative or to superlative.

So first read the sentence, understand the meaning and then start converting. அதை விட்டு விட்டு வெறுமனே good-ஐ better-ஆகவோ long-ஐ longer-ஆகவோ மாற்றுவது interchange of degrees கிடையாது.  புரிகிறதா ரவி? சரி, டீ குடிக்கலாம் வா” என்ற படியே தன் இருக்கையை விட்டு எழுந்து சென்றார் ரகு.

ஆங்கில வார்த்தை சந்தேகங்களுக்கு தொடர்புகொள்ள englishsundar19@gmail.com

சேலம் ப.சுந்தர்ராஜ்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post