நீட் தேர்வு குளறுபடி விவகாரம்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் - Kalvi news

Home Top Ad

Post Top Ad

Tuesday, 8 May 2018

நீட் தேர்வு குளறுபடி விவகாரம்: தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நீட் தேர்வு குளறுபடி தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கும் மனித உரிமை ஆணையம்  நோட்டீஸ் அனுப்பி உள்ளது. 
நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களை அலைக்கழித்தது ஏன் என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீட் தேர்வுக்காக மகனுடன் கேரளாவுக்குச் என்ற கிருஷ்ணசாமி என்பவர் உயிரிழந்தார். கிருஷ்ணசாமி உயிரிழப்பு குறித்து விளக்கம் அளிக்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேவையான மையங்கள் அமைக்காதது தொடர்பாக விளக்கம் அளிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பெற்றோர் சிரமங்களை சந்தித்தது மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.மேலும் சிரமத்தை சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டியது மாநில அரசின் கடமை. எதிர்காலத்தில் இதுபோன்று சம்பவம் நடக்காமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று மனித உரிமை ஆணையம்  கேள்வி எழுப்பியுள்ளது. ஊடக தகவல்கள் அடிப்படையில் தானாக முன்வந்து மனித உரிமை ஆணையம் விசாரணை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post Bottom Ad