Title of the document

ஜிப்மர் நுழைவுத் தேர்வு :ஹால் டிக்கெட் 21ம் தேதி முதல் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்

ஜிப்மர் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகளை 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

ஜிப்மர் எம்பிபிஎஸ் பட்டப்படிப்புக்கான நுழைவுத்தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 7ம் தேதி முதல் விண்ணப்பம் பதிவு செய்ய அறிவிக்கப்பட்டது. ஏப்ரல் 13ம் தேதி ஆன்லைன் பதிவு முடிந்தது

இதையடுத்து, நுழைவுத் தேர்வு ஜூன் மாதம் 3ம் தேதி காலை, மாலை என இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்வு எழுத வரும் போது அடையாள அட்டை(ஆதார், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட்) மற்றும் ஒரு போட்டோ எடுத்து வர வேண்டும்

காலையில் 10 மணி முதல் 12.30 மணிவரை நடக்கும் தேர்வில் பங்கேற்க வேண்டியவர்கள் காலையில் 7.30 மணிக்கே தேர்வு மையத்துக்கு வர வேண்டும்

மதியம் 3 மணிக்கு தொடங்கி மாலை 5.30 வரை நடக்கும் தேர்வில் பங்கேற்போர் மதியம் 2.30க்குள் தேர்வு மையத்துக்கு வந்துவிட வேண்டும்

அதற்கு பிறகு வருவோர் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது என்று ஜிப்மர் நிர்வாகம் தெரிவித்துள்ளது

தேர்வில் 200 கேள்விகள் இடம் பெறும். ஆங்கில மொழியில் மட்டுமே கேள்விகள் கேட்கப்படும்.  தேர்வு முடிவுகள் ஜூன் 20ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு கட்ஆப் பட்டியல் வெளியாகும்

தேர்வு எழுதியவர்கள் ஆன்லைன் மூலம் ரேங்க் பட்டியலை பெற்றுக்கொள்ள முடியும். இதையடுத்து ஜூன் 27ம் தேதி கவுன்சலிங் தொடங்கும்

இதற்கான ஏற்பாடுகளை ஜிப்மர் நிர்வாகம் செய்து வரும் நிலையில் நுழைவுத் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் வரும் 21ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post