Title of the document

5ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி

நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் இனி 5-ம் வகுப்பு வரையில் மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை அமலில் இருக்கும்.

5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. மாற்றம் செய்வதற்கான மத்திய
மனிதவள மேம்பாட்டுத் துறையின் பரிந்துரைக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைகிறது என மனிவதவள மேம்பாட்டுத் துறை தெரிவித்து உள்ளது. தற்போது 8-ம் வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சி முறையானது நடைமுறையில் உள்ளது.

தேசிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசிக்க மத்திய கல்வி ஆலோசனை வாரியம் (சி.ஏ.பி.இ) கடந்த வருடம் டெல்லியில் கூடியது. அப்போதைய மேம்பாட்டுத் துறை மந்திரி ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது 8–வது வகுப்பு வரை நடைமுறையில் உள்ள கட்டாய தேர்ச்சி முறை வேண்டாம் என்று மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அப்போது ஸ்மிருதி இரானி பேசுகையில், 8-ம் வகுப்பு வரையில் மாணவர்களை பெயில் ஆக்குவதில்லை என்ற கொள்கையை ரத்து செய்வதற்கு அனைவரும் ஒருமனதாக ஆதரவு தெரிவித்தனர் என்று தெரிவித்து இருந்தார். 8-ம் வகுப்பு வரையில் மாணவர்கள் பெயில் ஆக்க கூடாது என்ற திட்டம் முந்தைய காங்கிரஸ் தலையிலான அரசினால் கொண்டுவரப்பட்டது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post