வந்துவிட்டது #WhatsappVideoCall! எப்படி இருக்கிறது?


வாட்ஸ்அப் தனது புதிய வீடியோ காலிங் சேவையை சில நாட்களுக்கு முன்பு பீட்டா பயனாளிகளுக்கு அறிமுகப்படுத்தியது. சோதனை ஓட்டமாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த வசதி இன்று அனைத்து பயனாளர்களுக்கும் மொத்தம் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு,
ஐ.ஓ.எஸ் மற்றும் விண்டோஸ் ஆகிய மூன்று இயங்குதளங்களிலும் இந்த வீடியோ கால் வசதி இயங்கும். உங்கள் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்துவிட்டால் போதும். இந்த வசதியை நீங்கள்  பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு 4.1 வெர்ஷன் முதலே இது இயங்கும்.

வழக்கம்போலவே நீங்கள் பேச விரும்பும் நபரை, கான்டேக்ட் லிஸ்டில் தேர்வு செய்து, கால் செய்யலாம். அப்போது வாய்ஸ் கால் அல்லது வீடியோ கால் என இரண்டு ஆப்ஷன்கள் காட்டப்படும். அதில் வீடியோ கால் ஆப்ஷனை தேர்வு செய்தால் போதும். வீடியோ கால் சென்று விடும். அதே சமயம் நீங்கள் அழைக்கும் நபரும், தனது வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லையெனில் நீங்கள் கால் செய்யும் போதே, அதனை காட்டிவிடும். அத்துடன் நீங்கள் கால் செய்யும் நபரின் மொபைல், வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்ய வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் ஓகே என்றால், வீடியோ காலிங் ரெடி. உங்கள் நெட்வொர்க் இணைப்பை பொறுத்து வீடியோ காலின் தரம் இருக்கும்.
கூகுள் டுயோ, ஐ.எம்.ஓ, ஸ்கைப், ஃபேஸ்டைம் போலவே, பெரிய வித்தியாசம் எதுவும் இல்லாமல் இருக்கிறது வாட்ஸ்அப் வீடியோ கால். வாட்ஸ்அப் சாட் போலவே இதுவும் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் செய்யப்பட்டது. வீடியோகால் பேசிக் கொண்டிருக்கும் போதே, முன் மற்றும் பின் கேமராவை மாற்றிக் கொள்ளவும், ஒலி அளவை மியூட் செய்யவும் முடியும். அதே சமயம் பல போன்களில் வாட்ஸ்அப்பை அப்டேட் செய்து வைத்திருந்தாலும் கூட, 'இந்த போன் வீடியோ காலிங் வசதிக்கு சப்போர்ட் செய்யாது' எனக் காட்டுவது எரிச்சல். இதற்கு கிடைக்கும் வரவேற்பு மற்றும் கருத்துக்களை அடுத்து இன்னும் இதனை மேம்படுத்துவோம் எனவும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது. பார்ப்போம்!

சாதாரண இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப்பாக இருந்த வாட்ஸ்அப், அடுத்து வாய்ஸ் காலிங் வசதியை வெளியிட்டது. தற்போது வீடியோ காலிங் ஆப்ஸ்களுக்கு வரவேற்பு பெருகிவரும் நிலையில் அதனையும் இணைத்துள்ளது. ஏற்கனவே வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களுக்கு இது ஒரு கூடுதல் ஆப்ஷன். அதே சமயம் மற்ற போட்டியாளர்களை சமாளித்து வீடியோ காலிங் ஸ்பெஷலிஸ்ட்டாக வாட்ஸ்அப் மாறுமா என்பது சந்தேகம்தான்

No comments:

Post a Comment

Popular Posts

 

Most Reading

Follow by Email