Title of the document

பெரியார் பல்கலைக்கழகத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச நுண்ணுயிரியல் கருத்தரங்குக்கு ஆராய்ச்சியாளர்கள் கட்டுரைகளை அனுப்பலாம் என்று, பல்கலைக்கழகத் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பெரியார் பல்கலைக்கழக நுண்ணுயிரியல் துறை சார்பில், உணவு, நீர் மற்றும் ஆற்றல் பாதுகாப்பில் நுண்ணுயிரியலின் பங்கு என்ற தலைப்பில் மூன்று நாள் சர்வதேச கருத்தரங்கம் டிசம்பர் 21-ஆம் தேதி முதல் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இந்தக் கருத்தரங்கில், அமெரிக்க பல்கலைக்கழகப் பேராசிரியர் லிண்டா கென்னி, சிங்கப்பூர் மருத்துவப் பல்கலைக்கழகப் பேராசிரியர் இளவழகன் முருகன், மலேசிய 
பேராசிரியர் கே.மாரிமுத்து, இந்திய விஞ்ஞானிகள் பி.குணசேகரன், ராகேஷ் சர்மா, துர்க் விஜய்சிங், எஸ்.பொன் மாரியப்பன் ஆகியோர் அமர்வுகளில் பங்கேற்க உள்ளனர்.

கருத்தரங்கில் பங்கேற்க விரும்பும் ஆராய்ச்சியாளர்கள், டிசம்பர் 10-ஆம் தேதிக்குள் கருத்தரங்க அமைப்பாளரும், நுண்ணுயிரியல் துறைத் தலைவருமான பேராசிரியர் ஆர்.பாலகுருநாதன் தலைமையிலான குழுவினரிடம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தங்களது கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர், டிசம்பர் 1-ஆம் தேதிக்குள் icfewm2016000gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.
சர்வதேசக கருத்தரங்கம் குறித்து கூடுதல் தகவல் தேவைப்படுவோர், கருத்தரங்க ஒருங்கிணைப்பு செயலர் பேராசிரியர் ஏ.முருகனை, 8903446800 என்ற செல்லிடப்பேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post