Title of the document


தமிழக பள்ளிக் கல்வித் துறை மற்றும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் இணைந்து வெளியிட்டுள்ள "தாயெனப்படுவது தமிழ்'என்ற காணொலிக் குறுந்தகடு, தமிழகம் முழுவதும் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.
கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செ.செ.காட்டுவளவு அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியர் மை. அமலன்ஜெரோம் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தமிழ்ப் பாடப்பாடப் புத்தகங்களில் உள்ள 40 பாடல்களை விடியோ பதிவாக இசையுடன் தொகுத்துள்ளார்.
இவரது முயற்சியைக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபீதா, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்க இயக்குநர் ராமேஸ்வரமுருகன், உதவிப் பேராசிரியர் சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் நடராஜன் ஆகியோர் குறுந்தகடாக வெளிவர உறுதுணையாக இருந்துள்ளனர்.
அரசுப் பள்ளி மாணவ, மாணவியர் இப்பாடல்களுக்கு நடனமாடியுள்ளனர். இந்த குறுந்தகடை மாநில பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் இந்த குறுந்தகடை மாணவர்களுக்குக் கட்டாயம் காண்பிக்க வேண்டும் என்ற உத்தரவுடன், அனைத்துத் தொடக், நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
இந்தக் குறுந்தகடு சனிக்கிழமை மாணவர்களுக்கு காண்பிக்கப்பட்டது.
இந்த குறுந்தகடு மாணவர்களை மட்டுமன்றி வகுப்பு ஆசிரியர்களையும் உற்சாகம் ஊட்டக்கூடியது என்றும், அந்தப் பாடல்களின் கருத்துரு மாணவர்களை எளிதாகச் சென்றடையும் என்றும், இதேபோல ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களுக்கும் விடியோ வடிவங்களை கல்வித்துறை வெளியிட்டால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்குமென்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post