Title of the document


  ஒசூர்: காவிரி பிரச்சனைத் தொடர்பாக பெங்களூரில் லாரிகள் எரிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் நாளை ஓசூரில் மறியல் போராட்டம் நடைபெற்ற உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி கூறியிருப்பதாவது:
கர்நாடக மாநிலம் வழியாக குஜராத், டெல்லி, மகராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து 35 ஆயிரம் சரக்கு லாரிகள் சென்று வருகின்றன. கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள கலவரத்தில் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால் 200 கோடிக்கும் மேலான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக லாரிகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது போல், கர்நாடகத்திலும் தமிழக லாரிகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
மேலும், பல லாரிகள் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் நடைபெற்றுள்ள தாக்குதல்களை கண்டித்து, லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் ஒசூர் எல்லையில் நாளை காலை 10 மணிக்கு மறியல் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்தப் போராட்டத்தில் லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன மாநில தலைவர் செல்ல ராசாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் எரிக்கப்பட்ட லாரிகளுக்கு இழப்பீடாக 25 லட்சம் ரூபாயை லாரி உரிமையாளர்களுக்கு கர்நாடக அரசு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post