Title of the document

Tamilnadu Schools Reopen Date / பொங்கல் விடுமுறைக்கு பின் , பள்ளிகள் எப்போது திறக்கப்படும் ? 

Tamilnadu Schools Reopen Date
Tamil Nadu Schools Reopen Date,



பொங்கல் விடுமுறைக்கு பின், வரும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்ததும், இதற்கான அறிவிப்பு வெளியாகும்.


தமிழகத்தில், கொரோனா ஊரடங்கால்,மார்ச் முதல் பள்ளிகள்,கல்லுாரிகள் மூடப்பட்டன; ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்தப்படுகின்றன. நேரடி வகுப்புகள்சில மாதங்களாக, ஊரடங்கு விதிகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு, கல்வி நிறுவனங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு உள்ளன.கல்லுாரிகளில், இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும், 2020 டிசம்பர், 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. பாலிடெக்னிக் கல்லுாரிகளும் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடக்கின்றன.

பள்ளிகளையும் திறந்து, நேரடி வகுப்புகள் நடத்த, பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இதனால், பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், முதற் கட்டமாக நேரடி வகுப்புகளை துவங்குவது குறித்து, ஜனவரி, 6 முதல், 8 வரை, பெற்றோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.கண்கள் பாதிப்புபெரும்பாலான பெற்றோர், பள்ளிகளை திறக்க வேண்டியது கட்டாயம் என, தெரிவித்துள்ளனர்.


'ஆன்லைன் வகுப்பில் பாடம் புரிவதில்லை. மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுகின்றன. 'தொழில்நுட்ப பிரச்னைகள் ஏற்படுகின்றன. ஆசிரியர்கள் நேரடியாக சந்தேகங்களை போக்கியது போன்ற நிலை இல்லை' என, பெற்றோர் கூறினர்.அதேபோல, தேசிய அளவில், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற போட்டி தேர்வுக்கு தயாராக வேண்டிய நிலையில், நேரடி வகுப்புகள் நிச்சயம் தேவை என்றும் கூறியுள்ளனர். தனியார் பள்ளிகளும் விதிகளை பின்பற்றி, வகுப்புகளை நடத்த தயாராக உள்ளன.

இது குறித்து, பள்ளி கல்வித்துறை ஆய்வு செய்து, அரசிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. பெற்றோரது கருத்துப்படி, பொங்கல் விடுமுறை முடிந்ததும், 20ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம் என, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.


ஆசிரியர் தரப்பில் கருத்து

பொங்கல் விடுமுறைக்கு வெளியூர் சென்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர், தங்கள் வசிப்பிடங்களுக்கு வர வேண்டும். அதேபோல், பொங்கல் விடுமுறை முடிந்து, 18, 19ம் தேதிகளில், பள்ளிகளை திறப்பதற்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.


இதனால், 20ம் தேதி தான் பள்ளிகளை திறக்க முடியும் என, தலைமை ஆசிரியர்கள் தரப்பிலும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பள்ளி திறப்பு குறித்த அறிக்கை, முதல்வரின் ஒப்புதலுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் ஒப்புதல் அளித்ததும், முறைப்படி பள்ளிகள் திறப்பு தேதி அறிவிக்கப்படும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

4 تعليقات

إرسال تعليق

أحدث أقدم