Title of the document
 தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் :  ஐகோர்ட் உத்தரவு. 

  • தனியார் பள்ளி, கல்லுாரிகளில், ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் நடைமுறையை, அரசு மேற்கொள்ளக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
  • மனுவுக்கு, அரசு பதில் அளிக்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது. திருச்சியைச் சேர்ந்த, கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனு:தனியார் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. தனியார் கல்லுாரி ஆசிரியர்களுக்கு, பல்கலை மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு சம்பளம் நிர்ணயிக்கிறது.
  • ஆனால், அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளம், வேறு விதமாக உள்ளது. ஊரடங்கு காலத்தில், தனியார் பள்ளி, கல்லுாரிகளின் ஆசிரியர்கள், சிறிய சிறிய வேலைக்கு செல்கின்றனர். தனியார் பொறியியல் கல்லுாரியில் ஆசிரியராக பணியாற்றியவர், முறுக்கு தயாரித்து, விற்பனை செய்கிறார்.காய்கறி, பூ, இட்லி வியாபாரங்களில் பலர் ஈடுபட்டுள்ளனர். டிரைவர், உணவு டெலிவரி செய்யும் வேலைகளில் ஈடுபடுகின்றனர்.
  • இந்த ஆசிரியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கியிருந்தால், ஓரளவு சேமித்து Gவைத்திருப்பர்.இத்தகைய சூழ்நிலை, அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது. அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க, எந்த நடைமுறையும் இல்லை. எனவே, தனியார் பள்ளி, கல்லுாரி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவது, மாணவர்களிடம் கல்வி கட்டணம் வசூலிப்பது தொடர்பான நடவடிக்கைகளை, அரசே மேற்கொள்ள வேண்டும். தனியார் பள்ளி, கல்லுாரிகளில் நேரடியாக, 'ஆன்லைன்' வழியாக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை விசாரித்த, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அமர்வு, நான்கு வாரங்களில் பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 تعليقات

  1. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மட்டும் முழு சம்பளம் வழங்கப் படுகிறது. தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மட்டும் என்ன பாவம் செய்தனர்? இவர்களுக்காக யார் குரல் கொடுப்பது?

    ردحذف

إرسال تعليق

أحدث أقدم