அரசுப் பள்ளிகளில் கற்கும் திறன் அடிப்படையில் மாணவ, மாணவிகளை நான்கு வகையான பிரித்து மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகள் மெல்லக் கற்கும் மாணவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்கும் திறன் அடிப்படையில் மாணவ, மாணவிகளை நான்கு வகையான பிரித்து மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து மாவட்டம் வாரியாக பள்ளிகளில் கணக்கெடுப்பை நடத்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் திறனை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. 
கணக்கெடுப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர், மெல்லக் கற்கும் திறனுடைய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அதிகளவில் மெல்லக் கற்கும் மாணவர்கள் உள்ள பள்ளிகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், ஆசிரியர் தகுதித் தேர்வை முறையாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். மேலும் வரும் கல்வியாண்டில் 8 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவம், அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அவர் தகவல் அளித்துள்ளார்

0 Comments:

Post a Comment