Title of the document
பிளஸ்-2 தேர்வெழுதிய மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றில் சேர்வதற்காக, நீட் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். இந்தியா முழுவதும் இந்த ஆண்டு 15 லட்சம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள நிலையில் நீட் தேர்வில் வெற்றிபெறுவதற்கான சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம். இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரியல் ஆகிய நான்கு பாடங்களிலிருந்தும் 180 கேள்விகள் பரவலாகக் கேட்கப்படும். தவறான பதிலுக்கு நெகட்டிவ் மதிப்பெண் உண்டு.

தினசரி முந்தைய ஆண்டுகளில் கேட்ட கேள்வித்தாள்களைக் கொண்டு மாதிரித் தேர்வைத் தினசரி எடுத்துக்கொண்டு பதில் அளித்துப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். தினசரி மாதிரித் தேர்வுக்காக மூன்று மணி நேரமாவது செலவழித்தால் அது பயனுள்ள வகையில் அமையும். நீண்ட நேரம் மனதைக் குவிக்க இந்தப் பயிற்சி உதவும். நீட் தேர்வு நேரத்தை மாதிரித் தேர்விலும் அப்படியே பின்பற்றினால் நல்லது. ஓஎம்ஆர் ஷீட் மாதிரியிலேயே மாதிரித் தேர்வுக்கும் பதிலளிக்கப் பழகினால்தான் நீட் தேர்வை இயல்பாக எதிர்கொள்ள முடியும். நிறையக் கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென்று எண்ணாமல், நன்கு தெரிந்த கேள்விகளுக்குப் பதில் தருவதில் கவனத்தைச் செலுத்துங்கள். ஒவ்வொரு நாளும் மாதிரித் தேர்வைச் செய்து முடித்த பின்னர் பதில்களைச் சரிபார்த்துத் தவறான பதில்களுக்கான காரணங்களை அலசிப் பார்த்துக்கொள்ளுங்கள். அது பிழைகளைக் களைய உதவும் எந்தப் பிரிவில் தவறுகள் நேர்கின்றனவோ அந்தப் பிரிவுக்கான கேள்விகளில் அடுத்தடுத்த நாள் மாதிரித் தேர்வுகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

நீட் தேர்வுக்காக Toppr போன்ற செயலிகளையும் கான் அகாடமி வீடியோக்களையும் பயன்படுத்தி ஆன்லைன் வகுப்புகளைப் பார்த்துக் கற்றுத் தேறலாம். முக்கியமான தேற்றங்கள், வரையறைகளைக் கற்பதற்கு அத்தியாயம், அத்தியாயமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் குறிப்புகளும் வீடியோக்களும் உதவும். சந்தேகங்கள் ஏற்பட்டவுடன் அதைத் தீர்த்துக் கொள்வது அவசியம்.

Toppr போன்ற செயலிகளில் உங்கள் சந்தேகங்களை சாட்டிங் வழியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். 24 மணி நேரமும் பதிலளிக்கப்படும். உங்களுக்குச் சந்தேகமுள்ள பாடத்தின் படத்தை செல்போனில் கிளிக் செய்து அப்லோட் செய்தால் போதும். உங்கள் சந்தேகத்தைத் தெளிவுபடுத்தும்வரை, உடனடியாக ஒரு நிபுணர் சாட்டிங்கில் வந்து பதிலளிப்பார். நட்டநடு இரவிலும் உங்களுக்குப் பதிலளிக்க நிபுணர்கள் காத்திருக்கிறார்கள்.
நீட் தேர்வில் கவனம் செலுத்த வேண்டிய பிரிவுகள் இயற்பியல் : மெக்கானிக்ஸ், எலக்ட்ரோடைனமிக்ஸ், ஆப்டிக்ஸ் வேதியியல் : கெமிக்கல் பாண்டிங் அண்ட் கோ ஆர்டினேஷன் காம்பவுண்ட்ஸ், ஜெனரல் ஆர்கானிக் கெமிஸ்ட்ரி அண்ட் கார்போனில் காம்பவுண்ட்ஸ், கெமிக்கல் கைனட்டிக்ஸ் அண்ட் தெர்மோகெமிஸ்ட்ரி உயிரியல்: ஹியூமன் பிசியாலஜி, ஜெனிட்டிக்ஸ் அண்ட் எவல்யூஷன், ஈக்காலஜி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post