Title of the document
தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும், ஊதியத்தை, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. தலைமை ஓட்டுச்சாவடி அலுவலருக்கு, 1,700 ரூபாய்; முதல் நிலை முதல், நான்காம் நிலை அளவிலான ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, 1,300; உதவியாளர்களுக்கு, 650; ஓட்டு எண்ணிக்கை மேற்பார்வையாளருக்கு, 850; ஓட்டு எண்ணிக்கையாளர்களுக்கு, 650; உதவியாளர்களுக்கு, 300 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சி வகுப்பு, ஓட்டுப்பதிவு நாள் பணிகளுக்கு சேர்த்து, இந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்டல அலுவலர்களுக்கு, 1,500 ரூபாய்; உதவி மண்டல அலுவலர்களுக்கு, 1,000; காசாளர், உதவி காசாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு, 800; கிராம உதவியாளர் மற்றும் இதரப் பணியாளர்களுக்கு, 600; மைக்ரோ பார்வையாளர்களுக்கு, 1,500 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post