Title of the document


கண்ணாடி ஓர் அரிதில் வெப்பக் கடத்தி; அதாவது கண்ணாடியில் வெப்பம் மிக மெதுவாகச் செல்லும். எனவே கொதிநீரைத் தடித்த கண்ணாடிக் குவளையில் ஊற்றினால் அதன் தடித்த சுவர்ப்பகுதியில் வெப்பம் மிக மெதுவாகப்பரவுகிறது.

இதன் விளைவாக குவளையின் உட்பகுதியில் உள்ள வெப்பமானது வெளிப்பகுதியில் பரவியிருக்கும் வெப்பத்தைவிட மிக அதிகமாக இருக்கும்; அதாவது வெப்பம் சமச்சீரற்றுப் பரவுகிறது எனலாம். இதனால் சுவர்ப் பகுதியில் சமமற்ற விரிவாக்கம் நிகழ்ந்து உள்ளழுத்தம் உண்டாகிக் கண்ணாடியில் விரிசல் ஏற்படுகிறது. மாறாகக் கொதிநீரை மெல்லிய கண்ணாடிக் குவளையில் ஊற்றும்போது, அதன் சுவர்ப் பகுதி தடிமன் குறைந்து இருப்பதால் வெப்பம் ஓரளவு சமச்சீராகப் பரவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே கண்ணாடியில் விரிசல் உண்டாவது தவிர்க்கப்படுகிறது. தற்போது பைரக்ஸ் (Pyrex) எனும் புதுவகைக் கண்ணாடி புழக்கத்தில் வந்துள்ளது.

வெப்பநிலை உயர்வு காரணமாக சுவர்ப் பகுதியில் சமச்சீரற்ற விரிவாக்கம் நிகழாமல் விரிசல் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இவ்வகைக் கண்ணாடியைக் கொண்டு செய்யப்படும் குவளைகள் வெப்பநிலை உயர்வு காரணமாக எளிதில் உடைவதில்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post