Title of the document


திருக்குறள்

அதிகாரம்:அழுக்காறாமை

திருக்குறள்:162

விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்.

விளக்கம்:

யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.

பழமொழி

You cannot eat your cake and have it too

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை

இரண்டொழுக்க பண்புகள்

1.தமிழர் பண்பாடு என்பது மிக பழமையானது, ஆழமானது மேலும் உலக அளவில் போற்றப் படுகிறது எனவே இதற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் என் பேச்சு மற்றும் செயல்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்
2. நான் மாண்புமிகு மாணவன் எனவே எனது மனதை தீய நினைவுகள் இன்றி தூய்மையாகவும் செயல்களை சுத்தமாகவும் வைத்து கொள்வேன்.

பொன்மொழி

தன்னம்பிக்கையே நிகரில்லாத செல்வம். இடையூறுகளையெல்லாம் ஏடழியச் செய்வதும் அதுவே. அரும்பெருஞ் செயல்களையெல்லாம் செய்ததும்,செய்வதும்,செய்யப் போவதும் அதுவே.

      - ரஸ்கின்

  பொது அறிவு

1. தமிழ் தாத்தா என்று அழைக்கப்படுபவர் யார்?

 உ .வே .சாமிநாத ஐயர்

2. தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் யார்?

  வாணிதாசன்

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

இஞ்சி




1. நீரிழிவு நோயாளிகளின் ரத்தத்தில் சர்க்கரை சத்தின் அளவை அதிகரிக்காமல் சரியான அளவில் வைத்திருக்கும் அரும்பணியை இஞ்சி செய்கிறது.

2. இஞ்சியை வேகவைத்த நீரை நாம் அருந்தும் தேநீரில் கலந்து பருகி வந்தால் சீக்கிரத்தில் ஜலதோஷ பிரச்சனை நீங்கும்.

3. கல்லீரலை மீண்டும் பலம் பெற செய்ய தினந்தோறும் இஞ்சியை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் கல்லீரல் அது இழந்த சக்தியை மீண்டும் பெறும்.

English words and Meaning

Behold.  பார்த்தல்,நோக்கு
Belief.    நம்பிக்கை
Belong.   உரித்தாக்கு
Beset.   சூழ்ந்து கொள்
Betray.    வெளிப்படுத்து

அறிவியல் விந்தைகள்

ஆரோக்கிய உணவு
 *எல்லா சத்துக்களும் நிறைந்த உணவுகளை ஆரோக்கிய உணவு அல்லது சரிவிகித உணவு என்று கூறலாம்
* ஆனால் நாம் ஒரே உணவில் அனைத்து சத்துக்களும் பெற முடியாது. எனவே நாம் அடுத்த படிக்கு செல்லலாம்.
* அறிஞர்கள் பலர் ஆராய்ந்து இதற்கு ஒரு வழி கண்டு பிடித்தனர். 100 உணவு பெயர்கள் கூறி அவற்றை உண்ண அறிவுறுத்தினர்
* முதல் மூன்று இடங்களை பிடிப்பது சர்க்கரை வள்ளி கிழங்கு, இஞ்சி, பூசனிக் காய் ஆகும்.
* பாலும், உலர் பருப்புகளும் இதில் அடக்கம்.

Some important  abbreviations for students

* EDUSAT    -   Education Satellite

* e.g.     - exempli gratia; for example

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என தன்னுள் கவலையுடன் இருந்தாள்.

ஒருநாள் அவள் வழமைபோல் பாலைக் கறந்தெடுத்து குடத்டினுள் விட்டு அதனை விற்பதற்காக தெரு வீதி வழியே சென்று கொண்டிருந்த போது தன் வாழ்க்கைத் தரத்தை எப்படி முன்னேற்றலாம் என கற்பனை செய்தாள்.

இன்று பாலை விற்று வரும் பணத்தில். சில கோழிக் குஞ்சுகள் வாங்குவேன். அவை வளர்ந்து பெரிதானதும்..அவைகளை விற்று வரும் பணத்தில் இரண்டு ஆட்டுக் குட்டிகள் வாங்குவேன்.. அவை வளர்ந்ததும் அவற்றை விற்று இன்னொரு பசு மாடு வாங்குவேன்.. அவற்றைக் கொண்டு ஒரு பெரிய மாட்டுப் பண்ணை வைப்பேன். அதில் வேலை செய்ய பல பெண்களை வேலைக்கு அமர்த்துவேன்.

வருமானம் பெருகவே பலவிதமான ஆடை அணிகளையும் நகைகளையும் வாங்கி அவற்றை அணிந்து கொண்டு மற்றப் பெண்கள் எல்லாம் என்னைப் பார்த்து அதிசயிக்கக் கூடியதாக உல்லாசமாக இப்படி நடப்பேன் என தலையில் பால் குடம் இருந்ததை மறந்து அதைப் பிடித்திருந்த கையை எடுத்து விசுக்கி ஸ்ரையிலாக நடக்க ஆரம்பித்தாள்.

என்ன பரிதாபம் அவள் நடந்த நடையில் தலையில் இருந்த அனைத்து பாலும் கீழே கொட்டியது. குடமும் உடைந்தது

அவளுக்கு அன்றைய பால் வியாபாரம் நஷ்டமடைந்ததுடன்..பால் குடமும் வேறு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

அப்போதுதான் அவள், எந்த ஒரு காரியமும் நடந்து முடிக்கும் முன், அதை எண்ணி திட்டங்கள் போடக் கூடாது என்பதை உணர்ந்தாள்.

எந்த ஒரு செயலில் ஈடுபட்டாலும்..அதை முதலில் கவனமாக முடிக்க வேண்டும். இடையில் வேறு நினைவுகள் வந்தால் நஷ்டமே

செய்யும் செயலில் அவதானம் வேண்டும். இல்லையேல் பெருநஷ்டம்.

இன்றைய செய்திகள்
16.02.2019

* தீவிரவாதத் தாக்குதலுக்கு பலியான வீரர்களுக்கு சிறப்பு நிதி உதவி அளிக்க மத்திய அரசு ஆலோசனை.

''ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமாக போரில் கொல்லப்படும் குழந்தைகள்'' -  அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்.

* தமிழகம் முழுவதும் மார்ச் 10-ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்படும் : தமிழக அரசு அறிவிப்பு.

* பிப்ரவரி 24ம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2 டி20 மற்றும் ஒருநாள் போட்டித் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி, பும்ரா, ராகுல் இந்திய அணிக்குத் திரும்பினர்.

* புல்வாமா தாக்குதலில், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், சீவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுப்பிரமணியனும்,
அரியலூர் மாவட்டம் கார்குடி கிராமத்தை சேர்ந்த சிவசந்திரன் என்பவரும்  உயிரிழந்தனர்.  இவ்வீரர்களுக்கு நம் தமிழக ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக வீர வணக்கங்கள்...
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post