Title of the document


வடமதுரையைச் சேர்ந்த இருவரிடம், தேனி மாவட்ட வனத்துறையில் சேர்வதற்கான முதல்வர் பெயரில், போலி பணி நியமன உத்தரவு வழங்கி, 7.90 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.


திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சங்கர்களத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார், பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் காளிமுத்து. இவர்களிடம், தேனி மாவட்ட வனத்துறையில் வேலை வாங்கி தருவதாக, வனத்துறை ஊழியர்களான வைரம், பாஸ்கரபாண்டியன் அணுகினர். இதற்காக இருவரிடமும், 7.90 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனர்.


 பின், முதல்வர் அனுப்புவதாக போலியான பணி நியமன உத்தரவை தயாரித்துள்ளனர். அதில், 'மார்ச், 6ல் பணியில் சேரலாம்' என, தெரிவித்து தேனி மாவட்ட வன அலுவலர் கையெழுத்தை போட்டு வழங்கியுள்ளனர்.


 அதோடு, 'மேற்படி பணிக்கான செலவுத்தொகை, 4 லட்சம் ரூபாய்' என, குறிப்பிட்டுள்ளனர்.திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post