Title of the document
கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக செயல்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி அறிவித்தார். முதல்வரின் அறிவிப்பால் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி 33-வது மாவட்டமாக உருவாகிறது. நிர்வாக ரீதியாக பணிகளை மேற்கொள்ள சிரமமாக உள்ளதால் விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி பிரிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் மற்றும் சங்கராபுரம் உள்ளிட்டவை புதிய மாவட்டத்தில் அடங்கும் என தெரிவித்தார்.
புதிதாக உருவாக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தனி அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார். விழுப்புரம் பெரிய மாவட்டமாக இருப்பதால் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படுவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியை தனி மாவட்டமாக அறிவித்த முதல்வருக்கு எம்.எல்.ஏ.க்கள் பேரவையில் நன்றி தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக பிரிந்ததன் மூலம் பெரிய மாவட்டம் என்ற அந்தஸ்தை விழுப்புரம் இழந்துள்ளது. 7,194 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட விழுப்புரத்தில் 11 பேரவை தொகுதி, 13 வருவாய் வட்டங்கள் உள்ளன. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post