Title of the document

*TET*
1⃣7⃣.1⃣2⃣.2⃣0⃣1⃣2⃣ - *நெகிழ்வான நிகழ்வு*

*"ஆசிரியர்" தான் கனவு*
*அது தான் இலட்சியம்*
*என்று இருந்தவர்களுக்கு*
*சீனியாரிட்டி மாறி*
*இனிமே ஆசிரியர்* *கனவு பறி போய் விடும்*
*என்று எண்ணி*
*குறைந்த சம்பளத்தில்*
*தனியார்* *பள்ளி,கம்பெனி வேலை,*
*டுயூசன் சென்டர்,*
*பகுதி நேர* *வேலை,விவசாய* *வேலை*
*என காலங்கள் ஓட*
*ஒரு வழியாக* *வெளிவந்தது*
*தேர்வு அறிவிப்பு.*
*ஒரு வகையில் மகிழ்ச்சி*
*மறு வகையில் பயமே மிச்சம்.*
*அடித்து பிடித்து படித்து*
*90 ஐ நெருங்கியது ஒரு* *சிலர் மட்டுமே.*
*மீண்டும் தோல்வியில்* *பல முகங்கள்*
*நொந்தன.*
*மீண்டும் அதே ஆண்டில் அடுத்த தேர்வு.*
*அதைவிட வேகமாய் இன்னும் ஆயத்தம்.*
*இந்த முறை அதிக துணிச்சல்.*
*தேர்வு ஆக வேண்டிய நிர்பந்தம்.*
*காரணம் சலித்து விட்டது தனியார் வேலை.*
*தேர்வு முடிவு பலரும் தேர்வு.*
*அடுத்த குழப்பம்*
*இதில் எத்தனை* *பேருக்கு வேலை.*
*அனைவருக்கும் உறுதி வேலை என அறிவிப்பு வரவே*
*அமைதியானது* *உள்ளம்.*
*அப்படி ஒரு வேகம்*
*தொடர் சான்றிதழ் சரிபார்ப்பு*
*விரைவான கலந்தாய்வு*
*சென்னை வர சொல்லி அழைப்பு*
*முதல்வர் கையால் ஆணை*
*அடுத்தடுத்து சந்தோஷமான அதிர்ச்சிகள்.*
*இரவு நேர பயணம் தலைநகருக்கு*
*உண்மையில் தூக்கம் வரவில்லை.*
*எப்படி வரும் விடிந்தால் முதல்வர்*
*கையால் ஆணை*
*அடுத்த நிமிடமே நாமும் ஆசிரியர் என்று !!*
*விடியற்காலை நிறைந்தது அரங்கம்.*
*வருகை சற்று தாமதமே*
*ஆனாலும்* *அமைதியான காத்திருப்பு.*
*நல்ல பேச்சு*
*நல்ல வாழ்த்து*
*கையில் ஆணை*
*முழுமையானது* *விழாவும் மனதும் !!*
*டிசம்பர் 17 காலை*
*பணியில் சேர ஆணை*
*முதல் நாள் முதல்* *கையெழுத்து*
*இன்னமும் ஞாபகம்* *இருக்கிறது.*
*பேனாவை நன்கு பிடித்து*
*கையொப்பம் இட்டது.*
*அப்படி ஒரு திருப்தி.*
*வகுப்பறை செல்ல நடை*
*எழுந்து நின்ற மாணவர்களை*
*உட்கார சொல்லி விட்டு*
*ஐந்து நிமிடங்கள்* *தியானம் பண்ண* *சொல்லி*
*நாற்காலி மேல் கை வைத்து*
*ஆசிரியர் ஆகி விட்டோம்*
*இது நம் பள்ளி*
*நம் வகுப்பறை*
*நம் குழந்தைகள் என* *நெகிழ்ந்த தருணத்தை*
*இன்று நினைத்தாலும் இரண்டு சொட்டு*
*கண்ணீராவது கன்னத்தில் விழும்.*
*கண் மூடி கண் திறப்பதற்குள்*
*ஓடி விட்டன*
*ஆறு ஆண்டுகள்.*
*எத்தனை எத்தனை நிகழ்வுகள்*
*அனுபவங்கள் அதற்குள்.*
*இன்றைய நாள் தான் அன்றைய நாள்*
*என எண்ணினாலே இன்னமும் இனிக்கிறது.*
*ஏழாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும்*
*அத்துணை ஆசிரிய* *ஆசிரியைகளுக்கும்*
*இனிய பணியேற்பு* *நாள் வாழ்த்துகள்.*

இவண்
✍ *பண்டரி நாதன்*
*இடைநிலை ஆசிரியன்*
 2012 TET ஆசிரியர்களின் பணி சிறக்க kalvinews.com இன் வாழ்த்துக்கள் 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post