Title of the document


டிசம்பர் 1

உலக எய்ட்ஸ் தினம்

திருக்குறள்

அதிகாரம்:செய்ந்நன்றியறிதல்

திருக்குறள்:109

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்.

விளக்கம்:

முன்பு நன்மை செய்தவரே பின்பு நம்மைக் கொலை செய்வது போன்ற தீமையைச் செய்தாலும் அவர் முன்பு செய்த ஒப்பற்ற நன்மையை நினைத்த அளவில் அத்தீமை மறையும்.

பழமொழி

Honesty is the best policy

நேர்மையே நல்வழிக் கொள்கை

இரண்டொழுக்க பண்புகள்



* பிறரைக் குறித்து அநாகரீகமான வார்த்தைகளை உபயோகிக்க மாட்டேன்.

* தினமும் என்னாலான சிறு சிறு உதவிகளை செய்வேன்.

 பொன்மொழி

சொல்லும் செயலும் பொருந்தி வாழ்கின்ற மனிதனே உலகத்தில் மகிழ்ச்சியாக வாழும் மனிதன்.

      - நேரு

பொதுஅறிவு

1.மின் அடுப்பை கண்டுபிடித்தவர் யார்?

 பெர்சி ஸ்பென்சர்

2. மின்சார இஸ்திரி பெட்டி யாரால் கண்டுபிடிக்கப்பட்டது?

 ஹென்றி  சிலி

தினம் ஒரு பாரம்பரிய உணவுப் பொருளின் மகத்துவம்

புதினா



1.புதினா இலையில் வைட்டமின் “பி” சத்தும் இரும்புச் சத்தும் நிறைவாக உள்ளது. இது காய்ச்சல், விக்கல், காமாலை போன்றவற்றை குணமாக்கும்.

2. புதினா இலைச்சாறு கீல்வாத வலிக்கும், அஜீரணத்திற்கும் மருந்தாகும். புதினா இலைத்தூள், தலைவலி காயங்களைக் குணமாக்கும்.

English words and meaning

Oblige.      உதவிசெய்
Oblique.   சாய்வான
Oblong.    நீள் சதுரம்
Offence   குற்றம்
Ornament
அலங்கார ஆபரணம்

அறிவியல் விந்தைகள்

அறிவியல் அலகுகள்

* மின்னோட்டம் அளக்க - ஆம்பியர்
* கடல் ஆழம் அளக்க - பேதோம்
* ஆற்றல் அளக்க - ஜுல்
* அழுத்தம் - பாஸ்கல்
* விசை - நியூட்டன்

நீதிக்கதை

ஒரு காட்டில் துறவி ஒருவர் இருந்தார். அந்தக் காட்டில் வாழ்ந்துவந்த பறவைகள், விலங்குகள் அனைத்திடமும் நட்பாக இருந்தார். அவ்வப்போது அவற்றைச் சந்தித்து உரையாடுவார். அப்படி ஒரு நாள் அவர் காட்டை வலம்வரக் கிளம்பினார். முதலில், யானை ஒன்றைச் சந்தித்தார்.

‘‘என்ன யானையாரே எப்படி இருக்கீங்க?” என்று குசலம் விசாரித்தார்.

“இன்னைக்கு இந்தக் காடு இவ்வளவு பசுமையா இருக்குன்னா அதுக்கு எங்க யானைக் கூட்டம்தான் காரணம். போகும் இடங்களில் இருக்கும் பட்டுப்போன மரங்களை உடைச்சு பாதைகளை உண்டாக்குகிறோம். அதனால், பறவைகள் எச்சமிடும் விதையிலிருந்து புதிய மரங்கள் உருவாகுது. நாங்கள் போடும் பாதைகள்தான் மற்ற விலங்குகளுக்கு வழியாக மாறுகிறது. ஆனால், இங்கே யாருமே எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை யாரும் மதிக்கிறதுமில்லே” என்று சலித்துக்கொண்டது யானை.



துறவி சிரித்தார். யானைக்குப் பதில் ஒன்றும் சொல்லாமல், ''சரி, நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்தார்.

சற்று தூரத்தில் கரடி ஒன்றைச் சந்தித்தார். நிறையத் தேனடைகளையும் பலாப்பழங்களையும் சுமந்தபடி வந்துகொண்டிருந்த கரடியிடம், ‘`என்ன கரடியாரே, சந்தோஷமா இருக்கீங்களா?” என்று கேட்டார்.

இப்படி யாராவது கேட்க மாட்டார்களா எனக் காத்திருந்ததுபோல; சுமைகளை இறக்கிவைத்துவிட்டுப் புலம்ப ஆரம்பித்தது. ‘`தேனடைகள் எப்பவும் செங்குத்தான பாறை உச்சியிலோ, மரத்தின் உச்சியிலோ இருக்கும். நாங்க உயிரைப் பணயம் வெச்சு மேலே ஏறி எடுக்கிறோம். இதனால், தேனீக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறோம். அதுமட்டுமா? கரையான் புற்றுகளில் இருக்கும் கரையான்களைச் சாப்பிட்டு அவற்றையும் கட்டுப்படுத்துகிறோம். இல்லையென்றால், அவற்றால் மரங்களுக்குச் சேதம் ஏற்படும். ஆனால், யாரும் எங்க உழைப்பைக் கண்டுக்கிறதில்லே. எங்களை மதிக்கிறதுமில்லே!” - என அலுத்துக்கொண்டது.

அங்கிருந்து நகர்ந்த துறவி, குரங்கு ஒன்றைச் சந்தித்தார். ‘`என்ன மந்தியாரே, நல்லா இருக்கீங்களா?’’ எனக் கேட்டார்.

“கானகத்துக்குள் நுழையும் அந்நியர்கள் பற்றித் தகவல் கொடுத்து, இங்குள்ள பல உயிர்களைக் காப்பாற்றும் பணியைத் தொடர்ந்து செய்துட்டிருக்கோம். ஆனால், சேட்டைக்காரங்க என்ற கேலி மட்டும்தான் மிஞ்சியிருக்கு. எங்களை யாரும் புரிஞ்சுக்கிறதில்லே” என்று நொந்துகொண்டது குரங்கு.

துறவி, இதற்கும் பதில் சொல்லாமல் “சரி! நான் வர்றேன்!” என்றபடி நகர்ந்து சென்றார். சற்று தொலைவில் ஒட்டகச்சிவிங்கி ஒன்றைச் சந்தித்தார். “என்ன சிவிங்கியாரே! எப்படி இருக்கீங்க?’’ என்றார்.

“காடு பூரா புல்லு வளர்ந்து கிடக்கு. கோடைக் காலத்தில் இந்தப் புற்கள் காய்ஞ்சு உரசினால், காட்டுத் தீ பத்திக்கும். நாங்களும் மான்கூட்டமும் மேயறதாலதான் இது கட்டுக்குள்ளே இருக்கு. ஆனால், இங்கே யாரும் எங்க உழைப்பை நினைச்சுப் பார்க்கிறதில்லே” என்றது சிவிங்கி. இதற்கும் துறவி பதில் சொல்லாமல் நகர்ந்துசென்றார்.

அடுத்த நாள். விலங்குகள் அனைத்தும் துறவியின் அழைப்பின் பேரில் அவரது குடில் முன்பு கூடியிருந்தன. எதற்காக அழைத்தார் என்ற கேள்வி அவற்றின் முகங்களில் தொக்கி நின்றன. குடிலைவிட்டு வெளியே வந்த துறவி பேச ஆரம்பித்தார்.

“நீங்க எல்லாரும் உங்க கடமையை நல்லவிதமா செய்யிறீங்க. இருந்தாலும், உங்க உழைப்பை மற்றவங்க புரிஞ்சுக்கலை என்கிற வருத்தம் இருக்கு. யானையாரே, நீங்க உங்க வழித்தடத்தில் போகும்போது அடிக்கடி யாரைச் சந்திப்பீங்க?” எனக் கேட்டார்.

யோசித்த யானை,“மந்தியாரைச் சந்திப்பேன்!” என்றது.

“அப்படிச் சந்திக்கும்போது மந்தி செய்யும் வேலையை என்றைக்காவது பாராட்டி ரெண்டு வார்த்தை பேசினதுண்டா?” எனக் கேட்க, “இல்லை!” என்றபடி தலை கவிழ்ந்தது யானை.

அடுத்து, “கரடியாரே! நீங்க அடிக்கடி யாரைப் பார்ப்பீங்க?” என்று கேட்டார்.

“ம்... சிவிங்கியாரைப் பார்ப்பேன்!” என்றது கரடி.

“அப்படிச் சந்திக்கும்போது ‘உங்களால்தான் காட்டுக்குள் புற்கள் ஒரு கட்டுக்குள்ளே இருக்கு’னு சொல்லிப் பாராட்டி இருக்கீங்களா?’’ எனக் கேட்க, “இல்லை!” என்றபடி கரடியும் தலை கவிழ்ந்தது.

சிரித்த துறவி, “பார்த்தீங்களா... நாம யாரையும் பாராட்டி ஒரு வார்த்தை பேசுறதில்லை. ஆனால், மத்தவங்க மட்டும் நம்மைப் பாராட்டணும்னு எதிர்பார்க்கிறோம். முதலில், மற்றவங்களை மனசுவிட்டுப் பாராட்டக் கத்துக்கோங்க. அந்தப் பாராட்டு இயல்பா இருக்கணும். முகஸ்துதியா இருக்கக் கூடாது’’ என்றார் துறவி.

தங்கள் மன இறுக்கத்துக்கான காரணத்தைப் புரிந்துகொண்ட விலங்குகள், ஒன்றையொன்று பார்த்து மகிழ்வுடன் புன்னகைத்தன.

இன்றைய செய்திகள்

01.12.18

* முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தற்போது ஆண்டு ஒன்றுக்கு வழங்கப்பட்டு வரும் 2 லட்சம் ரூபாய் வரையிலான காப்பீட்டுத் தொகையினை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிட முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.

* தமிழகத்தில் விலங்குகள் நல வாரியம் அமைக்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெள்ளியன்று வெளியிட்டுள்ளது.

*  'ஜி-20' அமைப்பின் மாநாடு அர்ஜென்டினாவில் நேற்று துவங்கியது

* போர்ச்சுகல் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி ஆடவர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் இந்தியாவின் மானவ் தாக்கர் சாம்பியன் பட்டம் வென்றார்.

* இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் அடுத்த வாரம் டிசம்பர் 6 முதல் தொடங்குகிறது.
 இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா காயம் காரணமாக முதல் டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post