Title of the document

அரசு உயர்நிலை பள்ளி கூடலூர் மாணவ மாணவியர் தலைமை ஆசிரியர்,ஆசிரியர்,பள்ளி மேலாண்மை குழு ஆகியவை மூலம்  கஜா புயல் நிவாரணத்திற்கு கீழ்கண்ட நிவாரண பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டம்  பட்டுக்கோட்டை வட்டம் பரவலங்கோட்டை,தாமரங்கோட்டை ஆகிய கிராமங்களுக்கு நேரடியாக சென்று வழங்கப்பட்டது.
அரிசி
மாணவர் 2சிப்பம்
த.ஆசிரியை 2சிப்பம் பள்ளி மேலாண்மை குழு தலைவர் 2சிப்பம்
ஆசிரியர்கள் 2சிப்பம் மற்றும் பிரிட்டானியா பிஸ்கட் 5 பெட்டி கொசுவர்த்தி 1 பெட்டி மெழுகுதிரி 1பெட்டி தீப்பெட்டி 1 பெட்டி சேலை புதியது 6 கைலி 10 துண்டு 6 பழைய பேனர் 3 துவரம் பருப்பு 2 கிலோ உப்பு 5 பாக்கெட் மற்றும் அஉபள்ளி ஆசிரியர் கோபிநாத் குடும்பத்தினர் சார்பில் பிஸ்கட் 2பெட்டி குழந்தைகளுக்காக 58 பாக்கெட் பால்பவுடர் மற்றும் நண்பர்கள் பனிமலர் மோகன்,துரை,குரும்பலூர் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜார்ஜ் ஆகியோர் சார்பாக ஹமாம் சோப் சிறியது 68 நிவாரன்90 மருந்து 51 அமிர்தாஞ்சன் தைலம் 64 ஆகியன எடுத்து செல்லப்பட்டு கிராமத்திலுள்ள பாதிப்புக்குள்ளான நண்பர்களுடன் தனித்தனி பைகளில் இடப்பட்டு  நேரடியாக வழங்கப்பட்டது.மேலும் மின்வாரியத்துறை நண்பர்கள் இரவு பகல் பாராமல் உழைப்பதை கண்டு அவர்களுக்கு பிஸ்கட் பாக்கெட்கள் வழங்கினோம்.நாங்கள் சென்ற பகுதிக்கு மின்சாரம் கிடைப்பது என்பது இன்னும் இரண்டுமாத காலத்திற்கு கடினமே. புறப்படுவதற்கு முன்பாக நம் முன்னாள் மாவட்ட ஆட்சியர் உயர்திரு தரேஷ் அகமது ஐயா அவர்களை தொடர்பு கொண்டு நிவாரண பொருட்கள் கொண்டு வருகிறோம் எனகூறிய உடன் நான் பட்டுக்கோட்டையில் இருக்கிறேன் வந்த உடன்அழையுங்கள் என கூறினார்கள்.அங்கு சென்று அழைத்ததும் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நிவாரண முகாமிற்கு வாருங்கள் என்றார்.அங்கு சென்றவுடன் அமைச்சர்கள் ஆய்வு கூட்டத்திற்கு இடையில் எங்களை அழைத்து என்ன பொருட்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள் என விசாரித்து விட்டு மாணவர்கள் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற பாடுபடுங்கள் என கூறி அனுப்பினார்.இந்தபொருட்கள் கொண்டு செல்ல வாகன உதவி செய்த நண்பர்களுக்கு எமது பள்ளி நிர்வாகம் சார்பில் நெஞ்சார்ந்த நன்றி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post