Title of the document
விவசாயத்திற்கான மாற்றுச் சிந்தனைகள் உருவாகிக் கொண்டிருக்கும் வரை, அழிவு என்பது விவசாயத்துக்கு இல்லை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஓ.வி.சி. அரசு உதவி பெறும் பள்ளியின் உயிரியல் ஆசிரியர் அருள் வினோத்குமார். ஜெலட்டின் டியூப்களில் நெல் விவசாயம் செய்யும் புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியது: இந்த கேப்ஸ்யூல் புரதப்பொருளால் ஆனதால், மண்ணுக்கோ, மனிதனுக்கோ பாதிப்பில்லை. நெல் துாவும் போது ஏக்கருக்கு 45 கிலோ நெல்லும், நாற்றங்கால் முறையில் 35 கிலோ நெல்லும் தேவைப்படுகிறது.





ஜெலட்டின் முறையில் மூன்று கிலோ விதை நெல் போதும்.

10 லிட்டர் அசோஸ்பைரில்லத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து அதில் விதை நெல்லை ஒருநாள் முழுவதும் ஊறவைத்து, இரண்டு நாட்கள் நிழலில் உலர்த்த வேண்டும். வேப்பம் புண்ணாக்கு, கடலை புண்ணாக்கு, எள் புண்ணாக்கை சமஅளவு எடுத்து அரைக்க வேண்டும்.

இந்த கலவையுடன் மூன்று நெல்லை கேப்ஸ்யூலில் அடைக்க வேண்டும்.

வயலிலும் நீர்தேங்கியிருக்க வேண்டியதில்லை. கேப்ஸ்யூல் மண்ணில் செல்லும் அளவு ஈரப்பதம் இருந்தால் போதும். மூன்று நாட்களில் கேப்ஸ்யூல் கரைந்து விதை

நெல் முளைக்க

ஆரம்பிக்கும்.

தமிழக அரசு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, நீலபச்சை பாசி திரவங்களை இலவசமாக தருகிறது. நெல்லை பயிரிடும் முன்பாக சணப்பு, தக்கைப்பூண்டு, அகத்தி என, பசுந்தாள் உரங்களை பயிரிட்டு, பூக்கும் பருவத்தில் மடக்கி உழ வேண்டும்.

இந்த முறையில் மண்ணில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து நிறைந்து மண் வளமாக இருக்கும்.நுண்ணுாட்டம் பெற்ற நெல் நடும் போது, 25 நாட்களில் பயிருக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும்.

25 செ.மீ., இடைவெளியில் கேப்ஸ்யூல் நடும் போது, அதிக காற்றோட்டம் கிடைக்கிறது.

களைகள் குறையும். அதிகபட்சமாக 80 துார் வரை பிடித்து, கதிர்கள் நிறைய கிடைக்கும். வழக்கமாக ஏக்கருக்கு 45 மூடை நெல் விளையும் என்றால், கேப்ஸ்யூல் முறையில் 60 மூடை நெல் உற்பத்தி கிடைக்கும்.

கிராமங்களில் எனது மாணவர்களை அழைத்துக் கொண்டு, ஜெலட்டின் முறை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன் என்றார்.

தொடர்புக்கு

94872 13572

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post