Title of the document


மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தின் கீழ், அரசின் பங்களிப்பை, 10 சதவீதத்தில் இருந்து, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண் ஜெட்லி, டில்லியில் நேற்று கூறியதாவது:மத்திய அரசு ஊழியர்களின் நலனை மனதில் வைத்து, தேசிய ஓய்வூதிய திட்டத்தில், நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இந்த திட்டத்துக்கு, அரசு தரப்பில் இருந்தும், ஊழியர்கள் தரப்பில் இருந்தும், 10 சதவீதம் பங்களிப்பு அளிக்கப்பட்டு வந்தது.இதில், அரசு தரப்பு பங்களிப்பை, 14 சதவீதமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.பணி ஓய்வு பெற்ற பின் எடுக்கப்படும்,60 சதவீத தொகைக்கு, வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இனி, முழுவதுமாக வரி விலக்கு அளிக்கப்படும்.மத்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும், அனைத்துப் பிரிவு ஊழியர்களுக்கும், இந்த வரி விலக்கு, பொருந்தும். இதனால், 2019 - 20 நிதி ஆண்டில், அரசுக்கு, 2,840 கோடி ரூபாய், கூடுதல் செலவு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post