Title of the document

பள்ளியிலேயே வீட்டுப்பாடம், புத்தக்கப்பையைச் சுமக்கத் தேவையில்லை எனச் சிறப்பான பல முயற்சிகள் செயல்படுத்தப்படுகிறது, நாமக்கல் மாவட்டம், ஒருவந்தூர் புதூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில். அவை குறித்து உற்சாகமாகப் பேசுகிறார், தலைமை ஆசிரியர் சத்தியமூர்த்தி.


``தினமும் புத்தகப்பையைக் கொண்டுவந்து, கொண்டுசெல்வதில் மாணவர்களுக்குச் சிரமங்கள் இருக்கிறது. வீட்டுப்பாடம் செய்வதிலும் மாணவர்கள் கவனம் செலுத்துவதில்லை. எங்கள் பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகள் அன்றாட வீட்டுப் பாடங்களை பள்ளியிலேயே முடித்துவிடுவார்கள். பிறகு தங்கள் புத்தகப்பையை வகுப்பறையிலேயே வைத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். வாரம்தோறும் வெள்ளிக்கிழமை மட்டும் புத்தகப்பையை வீட்டுக்கு எடுத்துச் சென்று, திங்கட்கிழமை கொண்டுவந்துவிடுவார்கள்.
கடந்த ஒருமாதமாக இந்த முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்திவருகிறோம். இதனால் படிப்பை மாணவர்கள் சிரமமாக நினைப்பதில்லை. பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சி. அரையாண்டுத்தேர்வு முடிந்து ஜனவரி மாதத் தொடக்கத்தில் மாணவர்களுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்படும். அப்போது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் எல்லோரும் புத்தகப்பையை வீட்டுக்கு எடுத்துச் செல்லத் தேவையில்லை என்று நடைமுறைப்படுத்த இருக்கிறேன்" என்கிறார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post