Title of the document

புதிய கல்வி ஆண்டுக்கு, இன்னும், ஆறு மாதங்கள் உள்ள நிலையில், தனியார் பள்ளிகளில் தற்போதே, பிளஸ் 1 மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏப்ரலில் தான் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். பிளஸ் 1 வகுப்புக்கு, பொது தேர்வு மதிப்பெண் வந்த பின், ஜூனில் தான் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும்.ஆனால், தனியார் பள்ளிகள் தற்போதே, பிளஸ் 1க்கு, 'அட்வான்ஸ் புக்கிங் அட்மிஷன்' துவங்கியுள்ளன. 10ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியரிடம், பிளஸ் 1க்கு எந்த பிரிவு வேண்டும் என, பதிவு செய்யப்படுகிறது.முன்பதிவு விண்ணப்பத்தில், பொது தேர்வில் எவ்வளவு பெற வாய்ப்புஉள்ளது என, உத்தேச மதிப்பெண் பெற்று, பிளஸ் 1ல் விரும்பும் பிரிவில் இடம் ஒதுக்கப்படுகிறது.சில பள்ளிகள், நீட், ஜே.இ.இ., உள்ளிட்ட நுழைவு தேர்வுக்கான பயிற்சியை சேர்த்து வழங்குவதாக கூறி, கட்டணம் வசூலிக்கின்றன.அட்வான்ஸ் புக்கிங் செய்யப்பட்ட இடங்களை காட்டி, மீதமுள்ள இடங்களை, கல்வி ஆண்டு துவங்கும் போது, அதிக விலைக்கு விற்கவும் இடைதரகர்கள் தயாராகியுள்ளதாகவும், புகார் எழுந்துள்ளது.சென்னை, கோபாலபுரத்தில் உள்ள பிரபல பள்ளியின் முகப்பேர், சூளைமேடு கிளைகளில், பிளஸ், 1 அட்மிஷனுக்கு, ஜன., 12க்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு, அறிவிக்கப்பட்டுஉள்ளது.எனவே, பள்ளி கல்வி துறை உடனடியாக தலையிட்டு, பிளஸ் 1 அட்வான்ஸ் புக்கிங் மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post