Search News

KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கணிதம் - கற்றல் இனிது 1 - திரு கனவுப்பள்ளி பிரதீப்

Saturday, 15 December 2018கற்றல் இனிது 1 ...

ப-ப-ப, ப-கோ -ப , கோ-ப-கோ, செ-க-ப என்ன வேறு மொழியில திட்ற மாதிரி இருக்குங்களா ? இல்ல இல்ல இது கணக்கு பாடம்.
இந்த வார்த்தைகள் பெயரிட்டு கூறினாலே மாணவன் கணிதத்தை விட்டு தூர ஓடி விடுவான்.

Concept புரிஞ்சிடுச்சுனா 1000 கணக்கு தந்தாலும் அசத்தலா போட்டுடலாம்.


கணிதத்தில் அடுத்த நாள் நடத்தும் பாடத்திற்கான _ Surprise செயல்பாடுகளை வழங்குவதால் பாடம் சார் புரிதல் மேம்படும் என்ற கோணத்தில் இப்பயணம்.

பிள்ளைகளுக்கு கணிதம் புரியாமல் போவதற்கு காரணம் ... வாழ்வியலோடு தொடர்பற்ற கணக்கிடலே.

5 x 20 எவ்வளவு ? பதில் தராத மாணவனும் 5 பேர் கிட்ட 20 சாக்லேட் இருக்கு மொத்தம் என்றவுடன் 100 சார் என சொல்லும் மெல்ல மலரும் அரும்பின் குரலில் துளிர்க்கிறது - கணிதம் உயிர்ப்புடன்...

எனவே பாடம் நடத்தும் முந்தைய நாளில் சில களப்பயணம் - அவை தொடர்ந்து பாட விளக்கம்...இன்றைய தேடல் - சர்வ சம முக்கோணம் ...

சர்வ சம உருவம் முதல்ல புரிய சொல்லி தந்து தலைப்பை வெளிபடுத்தலாம்.

போர்டும் டஸ்டரும்,
ஜன்னலும் சுவரும்,
கொடி கம்பமும் சிறு செடியும் ,
ஜாமென்றி பாக்ஸ்யும்  5 ரூ அப்சரா ரப்பரும், சாப்பிடும் தட்டும்
டிபன் பாக்ஸ் மூடியும் ...

இதெல்லாம் கிட்ட திட்ட சர்வ சம உருவங்கள்

அதாவது வடிவம் ஓரே மாதிரியான உருவங்கள் - அவற்றிலிருந்தே சர்வ சமம் தோன்றுகிறது .. என்ன அதற்கு கொஞ்சம் ரூல்ஸ் இருக்கு...

முதல்ல இன்று நாம சர்வ சம முக்கோணம் பற்றி பார்ப்போம்.

வழியில் வரும் போது கண்ட பொருட்களில் எல்லாம் கணிதம் இருந்தது. அவையே இதற்கான செயல்பாடுகளாயின...

1.ஒரு பிரட் துண்டை கொண்டு வர செய்து மூலை விட்டம் வழி கட் செய்யும் போது கிடைக்கும் உருவத்தை உற்று நோக்குக..

2. 5 ரூ Dairy Milk சாக்லெட் யை மூலைவிட்டம் வழியாக கட் செய்து வரும் உருவம் எப்படி உள்ளது என பார்க்க ?

3. அமரும் தரையின் டைல்ஸ் மூலை விட்டங்களை சாக்பீஸ் கொண்டு வரைவோம் நிகழ்வது என்ன ?

4. மணல் கடிகாரம் வைத்து மணல் இறங்கும் போது உண்டாகும் முக்கோணம் போன்ற உருவத்தில் புரிவது என்ன ?

5. அஞ்சல் கடித 4 மடிப்புகளை மடித்து உற்று நோக்குக. என்ன உருவம் வருகிறது?

6. வீட்டில் பட்டம் தயார் செய்து குறுக்கே குச்சிகளால் ஒட்டும் போது தோன்றும் வடிவம் பார்த்து வா ?

7. கத்தரிக்கோல் திறக்கும் போதும் மூடும் போதும் உண்டாகும் உருவம் பார்?

8. கடைக்கு சென்று கயிறுதராசின் இரு புறமும் உண்டாக கூடிய முக்கோணத்தை நன்கு கவனி

9. தென்னம் பிஞ்சுகளை கொண்டு தேர்களை உருவாக்கி கொண்டு வா ? உருவத்தில் உணர்வது என்ன?

10. வீட்டின் கூரையின் இருபுறமும் பார் - மனதில் தோன்றுவது யாது ?

12. மின்னோட்டத்தை கொண்டு வரும் Tranform கம்பத்தின் உச்சிகளின் வடிவத்தை பார்த்து உணர்வதை எழுதி வா

13. பாலங்களில் உள்ள கம்பிகளிலும், பழைய  கட்டிடத்தின் மேல் தள இரும்பு கம்பிகளையும் பார் தோன்றும் உருவம் என்ன ?

14. காக்கா முட்டை பீட்சா போன்று தோசையை 8 சம பாகமா பிரிக்க என்ன உருவம் வருகிறது என பார் ?

15. மோகன் பர்த்டேக்கு வட்ட வடிவ கேக் வெட்டும் போது உருவாகும் வடிவத்தை பார்?

மேற்கூறிய அனைத்து நிகழ்வுகளிலும் சர்வ சம முக்கோணங்களை பயன்படுத்தி வாழ்ந்து வருகிறோம்.

சின்ன வயசுல செய்த காகித காமிராவிலும் - கத்தி கப்பலிலும் கூட வடிவொத்த முக்கோணங்கள் இருக்கு .. சர்வ சமம் இருந்தா கப்பல் அழகா வரும் இல்லனா அது... உடைஞ்ச கப்பலாயிடும்...இதை களப்பயணமாக வழங்கி விட்டு பின் - சர்வ சம முக்கோணம் நடத்தினால் இறக்கும் வரை கணித Concept மறக்காது.

இது போன்ற நிகழ்வுகளை உற்று நோக்கிய பின் ப-ப-ப
கோ - ப_ கோ
ப-கோ - ப
ஆகியற்றை கூறினால் - நிச்சயம் கணிதமும் இனிக்கும்.

தெரியாத விஷயம் ஒன்றை கூறவா ? என்றதும் மாணவர் விழிகள் உற்று நோக்கும் போது

டாவின்சி னு ஒருத்தரு வரைந்த மோனலிசா ஓவியமும் பல்வேறு சர்வ சம முக்கோணங்களை இணைத்து வரையப்பட்ட ஓவியமாம்...

எகிப்த்தில் மம்மிஸ் புதைச்சு வச்சுருக்க பல ஆயிரம் பிரமிட் உருவங்கள் சர்வ சம முக்கோணங்கள் தானாம் .. இதற்காக தேல்ஸ் என்பவர் பல வருஷம் ஆராய்ச்சி செய்திருக்காராம்...

வாவ்... ஆச்சரியத்துடன் கணிதத்திலும் ஆராய்ச்சி பண்ணலாமா சார் ?

ஆமாம் டா தம்பி ... புரிஞ்சதா எல்லாருக்கும் ? (உண்மையாகவே )புரிஞ்சது சார் எனும் போது - ஆசிரியம் வெற்றி பெறுகிறது.

 சிந்திக்கும்
பிள்ளைகளுடன் சங்கமிப்போம்

அடுத்த தேடலில் சந்திப்போம்...


கனவுப்பள்ளி பிரதீப்.
Post a Comment

Popular Posts

 

5th std 3rd week lesson plan

Google+ Followers

Follow by Email

Most Reading