Title of the document


சம்பள முரண்பாடுகளை களையக் கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களில் 117 பேர் மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
        சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 2009-ஆம் ஆண்டிற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், கடந்த 23-ஆம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலருக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, 117 பேருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரும் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பி, மீண்டும் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்திற்கு,  எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை என ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post