Title of the document
மதுரை பள்ளிகளில் நடந்த 'ஆப்பரேஷன்-இ' ஆய்வில் தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர் பாடத் திட்டம் எழுதாமல் வந்தது தெரிந்தது
நவம்பர் 1முதல் ரெகுலர் சி.இ.ஓ., பணியிடம் காலியாக உள்ளது.
மாவட்ட கல்வி அலுவலர் அமுதா சி.இ.ஓ., பொறுப்பு வகிக்கிறார்.
சி.இ.ஓ., இல்லாததால் 'ஆப்பரேஷன் இ' திட்டம், பள்ளி செயல்பாடுகள் சுணக்கமாக உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.
இதன் எதிரொலியாக நிறுத்தி வைக்கப்பட்ட 'ஆப்பரேஷன் இ' ஆய்வு, அமுதா தலைமையில்
10 குழுக்கள் தெற்கு
கல்வி ஒன்றிய
பள்ளிகளில் ஆய்வு நடத்தின.
ஈ.வெ.ரா., பள்ளியில் தாமதமாக வந்த ஆசிரியர் சிலர் வருகை பதிவில் முன் நேரமிட்டு கையெழுத்திட்டது தெரிந்து எச்சரிக்கப்பட்டனர்.
உமறுபுலவர் பள்ளியில் மாணவர் கவனத்தை ஈர்த்து கணிதம் நடத்திய ஆசிரியர் பாராட்டப்பட்டார்.
 தீபாவளி கொண்டாடிய ஆசிரியர் பலர், பாடத் திட்டம் (நோட்ஸ் ஆப் லெசன்) எழுதாமல் வந்தனர். அவர்களை குழு எச்சரித்து விளக்கம் கேட்டது.
அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெரும்பாலும் மாநகராட்சி பள்ளிகளில் ஆய்வு நடந்தது.
மாணவரின் கணிதம், ஆங்கிலம் வாசிப்பு திறன் குறைவாக இருந்தது.
சுகாதாரமும் சிறப்பாக இல்லை
நவம்பர் க்குள்
வாசிப்பு திறனை அதிகரிக்க ஆசிரியர்
உறுதியளித்தனர்.
மாநகராட்சி
அதிகாரிகள் பள்ளிகளை அடிக்கடி
கண்காணித்து
குறைகளை சரி செய்ய வேண்டும்"என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post