Title of the document


தமிழகம் உயர் கல்வியில் முன்னோடி மாநிலமாகத்
திகழ்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பகழன் தெரிவித்தார்

*சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்லைக்கழகத்தில்  நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் பேசியது*


*இந்திய அளவில் 903 பல்கலைக்கழகங்கள், 39,050 கல்லூரிகள், 10,011 தனிப்பாடக்கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 58 பல்கலைக்கழகங்கள், 2,472 கல்லூரிகள் உள்ளன*


*உயர்கல்வி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு 6 ஆண்டுகளில் 21 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகைத் தொழில் நுட்பக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 24 பல்கலை. உறுப்புக் கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன*



*இப்படி புதிய கல்லூரிகள் தொடங்கியதன் காரணமாக உயர் கல்வியில் மாணவர்கள் சேர்க்கை விகிதத்தில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. உயர்கல்வி சேர்க்கையில் இந்திய அளவிலான சராசரி 25.8 சதவீதமாகும்*


 *இதை 2020 இல் 30 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகம் உலக சராசியான 36 சதவீதத்தையும் தாண்டி,  2017-2018 கல்வியாண்டில் 48.6 சதவீதம் பெற்றுள்ளது என்றார்*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post